பேட்டிங் வரது போல ஜடேஜா பிராங்க் பண்ணல.. பண்ண சொன்னது தோனி பாய் – உண்மையை உடைத்த துஷார் தேஷ் பாண்டே

0
569
Dhoni

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி குறைந்த ஸ்கோர் கொண்ட போட்டியாக அமைந்தது. ஆனாலும் கூட ரசிகர்களுக்கு இது மிகவும் திருப்தியான போட்டியாக இருந்தது. காரணம் இந்த சீசனில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனி முதல் முறையாக பேட்டிங் செய்ய உள்ளே வந்தார்.

இந்த போட்டியில் வெற்றிக்கு மூன்று ரன்கள் தேவையாக இருந்த நிலையில் பேட்டிங் செய்ய தோனி உள்ளே வர, சொந்த மைதானம் என்கின்ற காரணத்தினால் ரசிகர்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது. அவர்களுக்கு தோனியின் வருகை வெற்றியை விட மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுக்கும் விஷயமாக அமைந்ததை நேரடியாக பார்க்க முடிந்தது.

- Advertisement -

இந்த நிலையில் தோனி பேட்டிங் செய்ய வருவதற்கு தயாராவது போல் திரையில் காட்டப்பட்டு, அதற்குப் பிறகு திடீரென சிஎஸ்கே அறையில் இருந்து ரவீந்திர ஜடேஜா பேட்டிங் செய்வது போல வந்தான், அந்த ஒரு நிமிடம் கூட்டம் அப்படியே ஏமாற்றத்திற்கு சென்றது. ஆனால் அதைத் தொடர்ந்து தோனி பேட்டிங் செய்ய வந்தார். இதை ஜடேஜா ரசிகர்களை பிராங்க் செய்ததாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் தோனிதான் ஜடேஜாவை இப்படி செய்ய வைத்திருக்கிறார்.

இதுகுறித்து பேசி இருக்கும் துஷார் தேஷ்பாண்டே கூறும் பொழுது “நான்தான் பேட்டிங் செய்யப் போகப் போகிறேன். ஆனால் அதற்கு முன் நீங்கள் பேட்டிங் செய்ய போவதாக நடியுங்கள் என்று ஜடேஜாவிடம் தோனி பாய் கூறியதை நான் உடைமாற்றும் அறையில் கேட்டேன்” என்று கூறியிருக்கிறார். இது சம்பந்தமாக ஜடேஜா கூறும்பொழுது “அவர் பேட்டிங் செய்ய வருவதாக திரையில் காட்டியதுமே ரசிகர்கள் ஆரவாரம் பெரிதாக இருந்தது. அவர்களின் பணத்திற்கான மதிப்பு கிடைத்தது போல அது” என்று கூறியிருக்கிறார்.

மேலும் துஷார் தேஷ்பாண்டே நேற்றைய போட்டி குறித்து பேசும்போது “ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் எங்களிடம் திட்டங்கள் இருக்கிறது. சில பேட்ஸ்மேன்களுக்கு இன்னும் கொஞ்சம் நல்ல திட்டம் எங்களுக்கு தேவை. பில் சால்ட்டுக்கு ஜடேஜா ஒரு நல்ல கேட்ச் எடுத்தார். சால்ட் இந்த ஐபிஎல் சீசனில் பேட்டிகள் நல்ல நிலையில் இருக்கிறார். அவரது விக்கெட்டை முதல் பந்திலேயே எடுக்க முடிந்தது நல்ல விஷயம். அதனால் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : தோனியால் களத்தில் நடந்த சம்பவம்.. அசந்து போய் ரசல் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு.. ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசல் எவ்வளவு அதிரடியான வீரர் என்பது எல்லோருக்குமே தெரியும். இந்த ஆடுகளத்தில் 20 – 25 ரன்கள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். எனவே கடைசிக் கட்டத்தில் அவரது விக்கெட்டை நான் எடுத்தது மிகவும் முக்கியமானதாக அமைந்தது” என்று பேசி இருக்கிறார்.