“14 வயசிலேயே பெரிய ரன் அடிப்பேன்.. வாய்ப்பு வேணும்”.. உலகசாதனை சிஎஸ்கே துஷார் தேஷ் பாண்டே பேட்டி

0
394
Dhoni

ரஞ்சி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் மும்பை மாநில அணிக்கு, தற்போது நடைபெற்று முடிந்த கால் இறுதிப் போட்டியில் 11வது பேட்ஸ்மேனாக களம் இறங்கி 120 பந்துகளில் 129 ரன்களை அதிரடியாக துஷார் தேஷ்பாண்டே குவித்து உலகச் சாதனை படைத்திருந்தார்.

28 வயதாகும் மும்பை வலதுகை வேகப்பந்துவீச்சாளரான இவர் ஐபிஎல் தொடரில் ஆரம்பத்தில் டெல்லி அணியில் இடம் பெற்று இருந்தார். அங்கு கிடைக்கப்பெற்ற வாய்ப்புகளில் இவரால் பெரிய அளவில் பந்துவீச்சில் ஜொலிக்க முடியவில்லை.

- Advertisement -

பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இவர் விளையாடுகிறார். இதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பந்துவீச்சில் இவர் ரன்கள் தரக்கூடிய பந்துவீச்சாளராகவே இருந்தார். ஆனால் விக்கெட் கைப்பற்றக் கூடியவராக இருக்கிறார்.

கடந்த ஐபிஎல் தொடரில் 16 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார். மகேந்திர சிங் தோனி கேப்டன்சி காரணமாக இவரை அணியில் சரியான இடத்தில் பயன்படுத்துவது தாக்கத்தை சில நேரங்களில் உண்டாக்குவதாக அமைந்திருக்கிறது.

இப்படியான நிலையில் தான் தன்னால் பேட்டிங்கிலும் நன்றாக செயல்பட முடியும் என்று ரஞ்சி கிரிக்கெட் தொடரில் காட்டி இருக்கிறார். இதன் காரணமாக அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் வரிசையில் தனக்கு வாய்ப்பு கிடைக்கவும் எதிர்பார்க்கிறார்.

- Advertisement -

தற்பொழுது இவர் திடீரென சர்துல் தாக்கூர் போல மாறியிருக்கிறார். சர்துல் தாக்கூரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில்தான் தற்பொழுது இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து துஷார் தேஷ்பாண்டே கூறும் பொழுது ” நான் பதினோராவது இடத்தில் பேட்டிங் செய்து சதம் அடிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். என்னால் இதைச் செய்ய முடியும் என்று நான் நம்பினேன்.

நான் எப்போதும் என்னை பேட்டிங்கில் நிரூபிக்க விரும்புகிறேன். நான் சிறந்த ஆல்ரவுண்டராக இருக்க முடியும் என்று என் தந்தை நம்பினார். என்னுடைய இந்த இன்னிங்ஸை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்.

இதையும் படிங்க : “என் மகன் தோனி இல்ல.. அவன் கிரிக்கெட் விளையாடியத நான் விரும்பல” – கண்ணீர் மல்க துருவ் ஜுரல் தந்தை பேட்டி

என்னால் பெரிய அளவில் ரன்கள் அடிக்க முடியும். நான் நிறைய ரப்பர்பந்து கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டிகளில் நான் பெரிய அளவில் ரன்கள் குவித்து இருக்கிறேன்” எனக் கூறியிருக்கிறார்.