என்னை நம்புங்கள்.. ஆண்கள் ஐபிஎல்-லை விட பெண்கள் ஐபிஎல்-லை விரும்பும் ரசிகர்கள் இருந்தார்கள் – பெண்கள் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பேட்டி!

0
113
Harmanpreet

கடந்த ஆண்டு பெண்களுக்கான உமன்ஸ் பிரிமியர் லீக் டி20 தொடர் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஐந்து அணிகளைக் கொண்டு இந்தியாவில் முதல்முறையாக நடத்தப்பட்டது. இந்தத் தொடரில் இறுதிப் போட்டிக்கு வந்த மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி முதல் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது!

பெண்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் தொடர் ஆரம்பத்தில் சில ஆட்டங்கள் மெதுவாக நகர்ந்ததாக தெரிந்தாலும், ஆனால் போகப் போக ரசிகர்களை தன் வசம் இழுக்க ஆரம்பித்தது. இந்தத் தொடர் குறித்து தினந்தோறும் நடக்கும் போட்டிகள் பற்றி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர ஆரம்பித்தார்கள். இறுதியில் இந்த தொடர் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

- Advertisement -

ஒரு காலத்தில் பெண்கள் கிரிக்கெட்டுக்கு எந்தவித பெரிய ஆதரவும் சக கிரிக்கெட் வாரியங்களால் கூட கிடைக்காது. ஏதாவது ஒப்புக்குத்தான் உலகம் முழுக்க நடைபெறுவதாக காட்டப்பட்டது. ஆனால் நாளாக நாளாக வீராங்கனைகள் தங்கள் திறமைகளை கூர்த்தீட்டி நல்ல கிரிக்கெட்டை கொடுக்க ஆரம்பித்தார்கள்.

இதன் மூலம் பெண்கள் கிரிக்கெட்டுக்கு வெளிச்சம் கிடைக்க ஆரம்பித்தது. நியூசிலாந்து, ஆண் வீரர்களுக்கு சமமாக பெண் வீராங்கனைகளுக்கும் சம்பளம் கொடுத்தது. இதற்கு அடுத்து இந்தியாவும் இதை நடைமுறைப்படுத்தியது. பெண்களுக்கான இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் உமன்ஸ் பிரிமியர் லீக் இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவில் பல பெண்களை கிரிக்கெட்டுக்கு அழைத்து வரும் கருவியாக மாறி இருக்கிறது.

இதுகுறித்து முதல் சீசனின் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில் “உமன்ஸ் பிரிமியர் லீக் எங்களுக்கு ஒரு கேம் சேஞ்சர். அந்தத் தொடரில் போட்டிகள் மிகவும் நன்றாக இருந்தது. அனைவரும் அது சொந்த நாட்டில் நடப்பதை விரும்பினர்.

- Advertisement -

அந்தத் தொடரில் இருந்து எங்களுக்கு கிடைத்த பதில்… என்னை நம்புங்கள், பார்வையாளர்களில் சிலர் ஆண்கள் ஐபிஎல் தொடரை விட பெண்கள் பிரிமியர் லீக் தொடரை மிகவும் விரும்பினர். இதில் அதிக அளவு ஆர்வம் காட்டினர். ஏனென்றால் இது பார்ப்பதற்கு புதிதாக இருந்தது.

பல ரசிகர்கள் இந்தத் தொடரை விரும்பினார்கள். இந்தத் தொடரில் நாங்கள் இன்னும் நிறைய அணிகளை சேர்ப்போம். அது எப்போது நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இறுதியில் ஒரு நாள் அது நடக்கும். நம் நாட்டில் நிறைய பெண்கள் இதில் திறமையானவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் இதில் வாய்ப்பு கிடைக்க வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!