பும்ரா சமி கிடையாது.. உலக கிரிக்கெட்டில் புதிய பந்தில் பெஸ்ட் பவுலர் இந்த இந்திய வீரர்தான் – டிரண்ட் போல்ட் தேர்வு

0
49
Bumrah

தற்போதைய காலகட்டத்தில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சிறந்த பந்துவீச்சாளராக மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த கிரிக்கெட் வீரராகவும் முதல் இடத்தில் இருப்பவர் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பரித் பும்ரா. இந்த நிலையில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் டிரண்ட் போல்ட் புதிய பந்தில் சிறந்த இந்திய பந்துவீச்சாளராக வேறு ஒருவரை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

பும்ரா பந்துவீச்சில் வித்தியாசமான ஆக்சனை கொண்டவர். இதுதான் அவருடைய பலம் மற்றும் பலவீனம் இரண்டுமே. இந்த ஆக்சன் காரணமாக பந்தை கணிப்பதற்கு பேட்ஸ்மேன்கள் தடுமாறுகிறார்கள். ஆனால் இதே ஆக்சன் காரணமாக அவருடைய உடலில் முதுகுப்பகுதி அதிக அழுத்தத்தை தாங்க வேண்டி இருக்கிறது.

- Advertisement -

இதன் காரணமாக முதுகில் ஏற்பட்ட காயத்தால் அவர் நியூசிலாந்து சென்று அறுவை சிகிச்சை செய்து, கடந்த வருடம் ஆசிய கோப்பை தொடருக்கு முன்பாக அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கு கேப்டனாகவே திரும்பி வந்தார். காயத்திற்கு பிறகு வந்த அவர் மீண்டும் பழைய முறையில் செயல்படுவாரா என்கின்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் இதையெல்லாம் தாண்டி காயத்திற்கு முன்பு இருந்ததை விட அவர் தற்பொழுது சிறந்த பந்துவீச்சாளராக மாறி இருக்கிறார். நல்ல அவுட் ஸ்விங் வீசுகிறார். இதன் காரணமாக அவர் முன்பை விட அபாயகரமான பந்துவீச்சாளராக ஒட்டுமொத்த உலகக் கிரிக்கெட்டில் மாறியிருக்கிறார்.

மேலும் தற்போதைய காலகட்டத்தில் இவருடன் இணைந்து அப்ரைட் சீமில் பேட்ஸ்மேன் விரும்பாத ஒரு வேகப்பந்துவீச்சாளராக முகமது சமி இருந்து வருகிறார். இவரது உடையாத சீம் பந்துவீச்சு காரணமாக, பந்து தரையில் பட்டால் எப்படி செல்லும் என்றே கணிக்க முடிவதில்லை. இதன் காரணமாக பேட்ஸ்மேன்கள் பெரிய சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இப்படியான நிலையில்தான் டிரண்ட் போல்ட் இவர்களை தாண்டி ஒருவரை புதிய பந்தில் சிறந்த பந்துவீச்சாளராக இந்தியாவில் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : சாம்சன் ரிங்கு சிங் இல்லை.. கைஃப் தேர்ந்தெடுத்த இந்திய டி20 அணி.. ஆச்சரியமான 15 வீரர்கள்

இதுகுறித்து டிரண்ட் போல்ட் கூறும்பொழுது “மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் உலகக் கிரிக்கெட்டில் புதிய பந்தில் மிகச்சிறந்த பந்துவீச்சாளராக புவனேஸ்வர் குமாரை நான் தேர்ந்தெடுக்கிறேன். அவர்தான் புதிய பந்தில் எல்லோரையும் விட சிறந்தவர்” என்று கூறியிருக்கிறார்.