சாம்சன் ரிங்கு சிங் இல்லை.. கைஃப் தேர்ந்தெடுத்த இந்திய டி20 அணி.. ஆச்சரியமான 15 வீரர்கள்

0
29
Rinku

தற்பொழுது இந்தியாவில் நடைபெற்று வரும் 17 வது ஐபிஎல் சீசன் மே மாதம் 26ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதற்கு அடுத்து வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை ஜூன் மாதம் 5ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. இதற்கான இந்திய அணி அறிவிப்பு ஏப்ரல் கடைசி வாரத்தில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் டி20 உலக கோப்பைக்கு தன்னுடைய பதினைந்து பேர் கொண்ட அணியை முகமது கைஃப் வெளியிட்டு இருக்கிறார்.

இதுகுறித்து முகமது கைஃப் பேசும்பொழுது ” கேப்டன் ரோகித் சர்மா உடன் இணைந்து ஜெய்ஸ்வால் ஆட்டத்தை துவங்குவார். மூன்றாம் இடத்தில் விராட் கோலி, நான்காவது இடத்தில் சூரியகுமார் யாதவ், ஐந்தாவது இடத்தில் ஹர்திக் பாண்டியா, ஆறாவது இடத்தில் ரிஷப் பண்ட் ஆகியோர் இருப்பார்கள்.

- Advertisement -

அதே சமயத்தில் பேட்டிங் டெப்த் அதிகம் தேவை என்கின்ற காரணத்தினால், நான் அதிகம் ஆல்ரவுண்டர்களை வைத்திருப்பேன். எனவே ஏழாவது இடத்தில் அக்சர் படேல், எட்டாவது இடத்தில் ரவீந்திர ஜடேஜா இருப்பார்கள். ஒன்பதாவது இடத்தில் குல்தீப் யாதவ், 10 மற்றும் 11ஆவது இடத்தில் பும்ரா மற்றும் அர்ஸ்தீப் சிங் இருப்பார்கள்.

மேலும் பதினைந்து பேர் கொண்ட அணியில் இன்னொரு சுழல் பந்துவீச்சாளர் தேவை. இந்த இடத்திற்கு அனுபவம் வாய்ந்த தற்பொழுது ஐபிஎல் தொடரில் நல்ல முறையில் விக்கெட்டுகள் கைப்பற்றிக் கொண்டிருக்கிற சாகல் இருப்பார். கடந்தமுறை அஸ்வின் சென்றார், அவரால் விக்கெட்டுகள் கைப்பற்ற முடியவில்லை. இப்பொழுது இவர் சரியானவர் ஆக இருப்பார்.

- Advertisement -

அடுத்து 15 பேர் கொண்ட அணிக்கு நான்கு வீரர்கள் தேவைப்படுகிறார்கள். இந்த இடத்தில் சுழல் பந்துவீச்சாளர்களை சிறப்பாக விளையாடும் சிவம் துபே, மற்றும் சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் ரியான் பராக் ஆகியோர்வருவார்கள். மேலும் பதினைந்தாவது வீரராக தற்பொழுது பாமில் இல்லை என்றாலும் கூட அனுபவம் வாய்ந்த சிராஜை வைத்துக் கொள்வேன்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : நல்லவேளை டெல்லி டீம்ல நான் இல்ல.. இருந்தா பிரித்வி ஷாவை அடிச்சிருப்பேன் – ஹர்பஜன் சிங் பேட்டி

முகமது கைஃப் வெளியிட்டுள்ள 2024 டி20 உலகக் கோப்பை இந்தியஅணி :

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஷிவாம் டு சத்பே, அர்ஷ்தீப் சிங், ரியான் பராக் மற்றும் முகமது சிராஜ்.

- Advertisement -