இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக வருவதற்கு பும்ராவுக்கு எல்லா தகுதியும் இருப்பதாகவும், ஆனால் ஒரு விஷயம் அவருக்கு பிரச்சனை தரக்கூடியதாக இருக்கும் என ஆஸ்திரேலியா லெஜெண்ட் முன்னாள் வீரர் ஆலன் பார்டர் கருத்து தெரிவித்திருக்கிறார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி ரோகித் சர்மா இல்லாததால் பும்ரா தலைமையில் விளையாடியது. இந்த போட்டியில் இந்திய அணி ஆச்சரியப்படுத்தும் விதமாக 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பும்ராவை குறை சொல்ல முடியாது
இந்த நிலையில் அதற்கடுத்து ரோகித் சர்மா தலைமையில் இரண்டு போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியை தோற்றது ஒரு போட்டியை தடுமாறி டிரா செய்தது. இதன் காரணமாக ரோகித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்றும் கேப்டனாக பும்ரா வரவேண்டும் எனவும் இந்திய தரப்பில் இருந்து நிறைய பேச்சுகள் இருந்திருக்கின்றன.
இதுகுறித்து ஆலன் பார்டர் கூறும் பொழுது ” பும்ரா கேப்டனாக சிறப்பாக செயல்படுவார். அவர் முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டனாக சிறப்பான முறையில் பீல்டிங் செட்டப்பை செய்தார். மேலும் ஒரு பந்துவீச்சாளராகவும் தன்னை அவர் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டார். இந்த விஷயங்களில் எல்லாம் அவரை நாம் பெரிதாக குறை சொல்லக் கூடிய அளவுக்கு எதுவும் இல்லை”
இது மட்டுமே கஷ்டமாக இருக்கும்
“நீங்கள் பவுலராக ஒரு ஓவர் வீசி முடித்ததும் தண்ணீர் குடிப்பதற்காக பைன் லெக்கில் சென்று பவுண்டரி எல்லையில் நிற்கிறீர்கள். ஆனால் நீங்கள் ஒரு கேப்டனாக இருக்கும் பொழுது உள்வட்டத்தில் மிட் ஆனில் நின்று அணியை வழிநடத்த வேண்டும். இதுதான் கடினமானதாக இருக்கும். ஆனால் பும்ரா ஒரு ஆக்ரோஷமான பந்துவீச்சாளர். ஆனால் ஆக்ரோஷமான மனிதர் கிடையாது. அவர் எப்பொழுதும் தனது முகத்தில் புன்னகையை வைத்திருக்கிறார்”
இதையும் படிங்க : முதல் 2 டெஸ்ட் போட்டியில் என்ன ஆட வைக்கல.. அதுதான் எனக்கு இந்த மாதிரி ஹெல்ப் பண்ணுச்சு – ஜடேஜா பேட்டி
“தற்போது உம்ரா பந்துவீச்சில் மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறார். அவர் மணிக்கட்டு மற்றும் பந்தை ரிலீஸ் செய்யும் பாயிண்ட் எல்லாம் வித்தியாசமாக இருக்கிறது. அவர் கையை முன்புறம் வைத்து பந்து வீசுவதால் ஒரு அடி பந்து இன்னும் கீழே செல்கிறது. மேலும் அவரிடம் ஒரு சிறிய ரன் அப் மட்டுமே இருக்கிறது. இப்படி வித்தியாசமாகவும் அதே சமயத்தில் திறமையோடும் இருப்பதால் பேட்ஸ்மேன்களுக்கு அவர் பெரிய சிரமமானவராக இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.






