உலக கிரிக்கெட்

ஹேசில்வுட் பேசினத வைச்சு அவதூறு பரப்பாதிங்க.. நாங்க ஒற்றுமையா இருக்கோம் – டிராவிஸ் ஹெட் விளக்கம்

தற்போது ஆஸ்திரேலியா அணியில் எந்த பிளவும் கிடையாது எனவும் இது குறித்து எந்த அவதூறும் பரப்புவது தவறானது எனவும் அந்த அணியின் வீரர் டிராவிஸ் ஹெட் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை ஆஸ்திரேலிய பவுலிங் யூனிட் 150 ரன்னில் சுருட்டியது. ஆனால் ஆஸ்திரேலியா பேட்டிங் யூனிட் இதை பயன்படுத்திக் கொள்ளாமல் 104 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆகி இந்திய அணிக்கு முன்னிலை கொடுத்தது. மேலும் இரண்டாவது இன்னிங்சிலும் சரியாக விளையாடாமல் தோல்வியும் அடைந்தது.

ஹேசில்வுட் விரக்தி பேச்சு

இந்த நிலையில் தோல்விக்கு பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய ஹேசில்வுட் “இந்த தோல்வி குறித்து நீங்கள் எங்கள் அணியின் ஏதாவது ஒரு பேட்ஸ்மேன் இடம்தான் இந்த கேள்வியை கேட்க வேண்டும். நான் தற்போது கொஞ்சம் ஓய்வு எடுத்து, மேலும் என்னுடைய பிசியோவிடம் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் அடுத்த டெஸ்டில் என்ன மாதிரியான திட்டங்களை கொண்டு வந்து இந்த பேட்ஸ்மேன்களுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்பதை பார்க்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

அவருடைய பேச்சில் ஆஸ்திரேலியா பேட்டிங் யூனிட் மீதான விரக்தி வெளிப்பட்டது. எனவே இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா அணியில் பிளவு ஏற்பட்டு விட்டதாக பல பேச்சுகள் வெளியில் செல்ல ஆரம்பித்தன. நான் பார்த்ததிலேயே இது மிகவும் டைட்டான யூனிட் என கேப்டன் கம்மின்ஸ் உடனடியாக அறிக்கை கொடுத்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க பார்த்தார். ஆனாலும் தற்போது வரை இந்த பேச்சுகள் சென்று கொண்டிருக்கிறது.

- Advertisement -

எங்கள் அணியில் பிளவு கிடையாது

இதுகுறித்து டிராவிஸ் ஹெட் கூறும்பொழுது “ஒரு மோசமான வாரம் இருந்த காரணத்தினால் மக்கள் இப்படியான விஷயத்தை கையில் எடுத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் அணி எப்பொழுதும் போல நன்றாக இருக்கிறது. நேற்று இரவு கூட எல்லா வீரர்களும் ஒன்றாக சேர்ந்து சுற்றி வந்தார்கள். நாங்கள் ஒரு அணியாக இருக்கும் விதத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை”

இதையும் படிங்க : ரிஷப் பண்ட் கிட்ட நாங்க இத சொன்னோம்.. அவர் ஏத்துக்காம வெளிய வந்துட்டார் – டெல்லி ஓனர் பேட்டி

“நாங்கள் நன்றாக ஓட்டிக் கொண்டிருக்கிறோம். எங்களுக்குள் நாங்கள் சில உரையாடல்களை நடத்தி முடித்திருக்கிறோம். இது அழகான நிலை தன்மை கொண்ட குழு. உண்மையில் இந்த தோல்வியால் அணியைச் சுற்றி நிறைய ஏமாற்றம் இருந்தது. ஆனால் இது அணைக்குள் எந்த வித பிளவையும் உருவாக்கவில்லை” என்று கூறியிருக்கிறார்

- Advertisement -
Published by
Tags: Travis Head

Recent Posts