ஆஸ்திரேலியா அணி உள்நாட்டில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான வெள்ளைப்பந்து தொடர்களில் இருந்து டிராவிஸ் ஹெட் விலகி இருக்கிறார்.
ஆஸ்திரேலியா அணி அடுத்து பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாட இருக்கிறது. அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்பதற்கு ஆஸ்திரேலியா அணிக்கு இது உதவி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிராவிஸ் ஹெட் எடுத்த அதிரடி முடிவு
இந்த நிலையில் டிராவிஸ் ஹெட் தன் மனைவிக்கு இரண்டாவது குழந்தை பிறக்க இருக்கின்ற காரணத்தினாலும், அடுத்து இந்திய டெஸ்ட் தொடருக்கு முன்பாக தன்னை மிகவும் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும், ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டிடம் பாகிஸ்தான் வெள்ளைப் பந்து தொடர்களில் கலந்து கொள்ள முடியாது என்று தெரிவித்து சம்மதம் வாங்கியிருக்கிறார்.
இந்த நிலையில் இந்த தகவலை ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டும் உறுதி செய்து இருக்கிறது. இந்திய அணிக்கு எதிராக நவம்பர் 22 ஆம் தேதி பெர்த் மைதானத்தில் நடைபெற இருக்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக டிராவிஸ் ஹெட் நீண்ட ஓய்வில் இருப்பார் என்று கூறப்பட்டு இருக்கிறது.
இந்திய தொடரில் இது கவலை இல்லை
மேலும் இந்திய டெஸ்ட் தொடரில் தன்னுடைய பேட்டிங் வரிசை பற்றி பேசி இருந்த டிராவிஸ் ஹெட் கூறும் பொழுது ” முதல் இடத்தில் இருந்து ஒன்பதாவது இடம் வரை எந்த இடத்தில் ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் என்னை விளையாட கூறினாலும் நான் களமிறங்கி விளையாடுவேன். அது குறித்து எனக்கு எந்த விதமான கவலையும் கிடையாது”
இதையும் படிங்க : அடுத்து புனே டெஸ்டில் ரிஷப் பண்ட் ஆடுவாரா.. அவருக்கு முதல் டெஸ்டில் என்ன சொல்லப்பட்டது? – ரோகித் சர்மா விளக்கம்
“ஆஸ்திரேலியா அணியிலும், ஆஸ்திரேலியா அணி நிர்வாகம் தேர்ந்தெடுக்கும் பிளேயிங் லெவனிலும் நான் இடம் பெற வேண்டும் என்று மட்டும்தான் விரும்புகிறேன். எந்த இடத்தில் விளையாட வேண்டும் என்று எனக்கு எந்த கட்டாயமும் கிடையாது. மேலும் நான் விளையாடுவதற்கு எனக்கு ஊக்கமாக எனது குடும்பமும் எனது அணி வீரர்களும் இருக்கிறார்கள். எனவே எப்பொழுதும் நான் என் குடும்பத்தை சுற்றி அதிக முடிவுகள் எடுப்பேன்” என்று கூறியிருக்கிறார்.






