அடுத்து புனே டெஸ்டில் ரிஷப் பண்ட் ஆடுவாரா.. அவருக்கு முதல் டெஸ்டில் என்ன சொல்லப்பட்டது? – ரோகித் சர்மா விளக்கம்

0
193
Rohit

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே புனே மைதானத்தில் நடைபெற இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் விளையாடுவாரா? என்பது குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்திருக்கிறார்.

நியூசிலாந்து அணிக்கு எதிராக பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்யும் போது பந்து முழங்காலில் பட்டு காயமடைந்தார். பிறகு அவர் விக்கெட் கீப்பிங் செய்ய வரவில்லை. ஆனால் பேட்டிங் செய்த பொழுது அவர் வழக்கம்போல் சுமுகமாக இருக்கவில்லை.

- Advertisement -

காத்திருக்கும் பெரிய சவால்கள்

இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அங்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாட இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் மிகப்பெரிய துருப்பு சீட்டாக ரிஷப் பண்ட் இருக்கிறார். எனவே அவரது காயம் குறித்து இந்திய அணி நிர்வாகம் மிகுந்த கவனத்தை எடுத்துக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாகவே அவரை விக்கெட் கீப்பிங் செய்ய வைக்கவில்லை.

மேலும் சாலை விபத்தில் சிக்கி அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட முழங்காலில் மீண்டும் பந்து தாக்கி இருப்பது கொஞ்சம் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும்பொழுது வழக்கம் போல் சரளமாக ஓட முடியவில்லை. அவருக்கு ஓடுவதில் பிரச்சனை இருந்ததை பார்க்க முடிந்தது.

- Advertisement -

ரிஷப் பண்ட் இரண்டாவது டெஸ்டில் விளையாடுவாரா?

இதுகுறித்து பேசி இருக்கும் கேப்டன் ரோஹித் சர்மா கூறும்பொழுது “அவரது காயத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவருக்கு ஏற்கனவே குறிப்பிட்ட முழங்காலில் பெரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது. அவர் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். மேலும் அவர் பேட்டிங் செய்யும்பொழுது வசதியாக ஓடவில்லை. எனவே நாமும் அவர் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அவர் பெரிய அதிர்ச்சியை சந்தித்துள்ள பையனாக இருக்கிறார். மேலும் கடந்த இரண்டு வருடங்களாக வலியுடன் வாழ்வது சாதாரண விஷயம் இல்லை”

இதையும் படிங்க : 15 வருடம்.. கோட்டை விட்ட தோனி ரோகித்.. கேப்டனாக கோலியிடம் மட்டுமே இருக்கும் பெருமை

“ரிஷப் பண்ட் மனதில் பேட்டிங் செய்யும்பொழுது என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. அது அவருக்கு மட்டும் தான் தெரியும். மேலும் அவர் விளையாடும் பொழுது அவர் விருப்பப்படி விளையாடுகின்ற சுதந்திரத்தை அவர் விரும்புகிறார். எனவே அவருக்கு நாங்கள் முழு சுதந்திரத்தை கொடுத்து இருக்கிறோம். அதே சமயத்தில் கண்டிஷன் எப்படியோ அதைப் பார்த்து விளையாடுமாறு கூறியிருக்கிறோம். ஆனால் களத்தில் அவர் என்ன செய்கிறார் என்பது அந்த நேரத்து முடிவு. அதுதான் ரிஷப் பண்ட்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -