No-1 அணிக்கு ஒரே வாரத்தில் நடந்த சோகம்.. நெருக்கடியில் பாகிஸ்தான்.. கோபத்தில் ரசிகர்கள்!

0
1726
ICC

நடப்பு ஆசியக்கோப்பை தொடர் பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய சோதனையாக மாறி இருக்கிறது. இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பு இருந்த நிலை, தற்பொழுது ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக திரும்பி இருக்கிறது!

ஆசியக் கோப்பை தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக, இலங்கையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3-0 என பாகிஸ்தான் அதிரடியாகக் கைப்பற்றியது.

- Advertisement -

இந்த வெற்றிக்குப் பிறகு பாகிஸ்தான் அணி ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் அணிகள் தரவரிசையில் முதல் இடத்திற்கு உயர்ந்தது. இது அந்த அணியின் கடந்த இரண்டு வருட செயல்பாடுகளுக்கான மதிப்பாக பார்க்கப்பட்டது!

மேலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆசியக்கோப்பை தொடரில் மிகவும் வலுவான அணியாகவும், செட்டில் செய்யப்பட்ட அணியாகவும் கூறப்பட்ட ஒரே அணி பாகிஸ்தான் அணிதான்.

அதே சமயத்தில் இந்திய அணியை எடுத்துக் கொண்டால் யார் விளையாடுவார்கள்? யாருக்கு என்ன இடம்? என்பது குறித்து எதுவுமே தெரியாது. இதன் காரணமாக இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு மிகக் குறைவாகவே இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் நேபாள் அணிக்கு எதிராக ஆசிய கோப்பை தொடரில் தனது முதல் ஆட்டத்தில் அதிரடி வெற்றி பெற்றது பாகிஸ்தான். கேப்டன் பாபர் ஆஸம் 151 ரன்கள் அடிக்க, இப்திகார் அகமது ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இதற்கு அடுத்து இந்தியா உடனான போட்டி மழையால் டிரா ஆனது. அடுத்து இரண்டாவது சுற்றில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் போட்டியில், 40 ஓவரில் இலக்க எட்டி பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.

இதுவரை எல்லாமே சரியாக பாகிஸ்தான் அணிக்கு சென்று கொண்டு இருந்தது. ஆனால் இரண்டாவது சுற்றில் இந்திய அணி உடன் மோதிய போட்டியில் விழுந்த அடி, பாகிஸ்தான் அணியை மீண்டும் எழவே விடவில்லை. நேற்று அது இலங்கைக்கு எதிரான போட்டியிலும் தொடர்ந்தது.

பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் தான் மிகவும் பலம் வாய்ந்தது என்று எல்லோராலும் கூறப்பட்டது. அந்த பலம் வாய்ந்த வேகப்பந்து வீச்சை இந்திய துவக்க ஆட்டக்காரர்கள் மிக அனாயசமாக அடித்து நொறுக்கினார்கள். நேற்று இலங்கையும் அதையே செய்தது. பாபர் ஆஸம் தங்கள் அணியில் எது சிறப்பானதோ, அந்த பந்துவீச்சு யூனிட்டையே சரியாகச் செயல்படவில்லை என்று கூறும் அளவுக்கு நிலைமை மாறியது.

இந்த நிலையில் ஐசிசி தரவரிசையில் சில நாட்களுக்கு முன்பு பெற்ற முதல் இடத்தை ஆஸ்திரேலியா அணியிடம் இழந்து இரண்டாவது இடத்துக்கு பாகிஸ்தான் சரிந்தது. இப்படி இருக்கும் பொழுது நேற்று இலங்கை அணிக்கு எதிராக தோற்று, இரண்டாவது இடத்தையும் இழந்து மூன்றாவது இடத்துக்கு சரிந்தது. இந்திய அணி தற்பொழுது இரண்டாவது இடத்திற்கு இலங்கையை வென்று முன்னேறி இருக்கிறது.

ஒரு வாரத்திற்குள் சாம்பியன் அணி என்று கணிக்கப்பட்ட அணியின் நிலைமை அப்படியே தலைகீழாக மாறிப் போனதுதான் கிரிக்கெட்டின் விசித்திரம்!