அம்பயரும் கிரிக்கெட் விதியும் சேர்ந்து எங்கள தோக்க வச்சுட்டாங்க.. பங்களாதேஷ் வீரர் குற்றச்சாட்டு

0
335
Hridoy

நேற்றைய டி20 உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் மோதிக் கொண்ட போட்டி நியூயார்க் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நடுவரின் ஒரு தவறான தீர்ப்பு மற்றும் கிரிக்கெட் விதி இரண்டும் சேர்ந்து பங்களாதேஷ் அணியின் வெற்றியை பறித்து விட்டது.

முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இலக்கைத் துரத்திய பங்களாதேஷ் அணி மிகவும் வலிமையான நிலைமையில் இருந்ததால் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த அணியின் இளம் வீரர் தவ்ஹீத் ஹ்ரிடாய் 34 பந்தில் 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்ததும் அப்படியே போட்டி தென் ஆப்பிரிக்கா பக்கம் சென்று விட்டது.

- Advertisement -

இந்த போட்டியில் 17 வது ஓவரை பார்ட்மேன் வீசினார். அப்போது மகமதுல்லா காலில் பட்டு பின்பக்கமாக பந்து பவுண்டரி சென்றது. அந்தப் பந்துக்கு எல்பிடபிள்யு நடுவர் கொடுத்தார். பின்பு ரிவ்யூ செய்ததில் நாட் அவுட் என்று வந்தது. ஆனாலும் நடுவர் அவுட் கொடுத்ததும் அந்தப் பந்தில் கிடைக்கும் ரன் செல்லாது என்கின்ற ஐசிசி விதியால், அந்த பவுண்டரி கொடுக்கப்படவில்லை. நடுவர் அவுட் கொடுக்காமல் இருந்திருந்தால் பவுண்டரி கிடைத்திருக்கும். இந்த நிலையில் 109 ரன்கள் மட்டும் எடுத்து பங்களாதேஷ் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

தற்போது இது குறித்து அந்த அணியின் இளம் வீரர் தவ்ஹீத் ஹ்ரிடாய் பேசும்பொழுது “உண்மையைச் சொல்வது என்றால் இவ்வளவு இறுக்கமாக சென்று கொண்டிருக்கும் போட்டியில் நடுவர் கொடுத்த அவுட்டே கடினமான விஷயமாக இருந்தது. அந்தப் பந்தில் கிடைத்த நான்கு ரன்கள் எங்களுக்கு பெரிய உதவியாக இருந்திருக்கும்.

சட்டம் என் கையில் கிடையாது. ஆனால் அந்த நான்கு ரன்கள் மிகவும் முக்கியமானவை. நடுவர்களும் தவறான முடிவுகள் எடுக்கலாம். ஏனென்றால் அவர்களும் மனிதர்கள்.இந்த போட்டியில் நடுவர்கள் எங்களுக்கு சில வைடுகளை கொடுக்கவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : 113 ரன்.. பவுண்டரி தராத அம்பயர்.. மோசமான கிரிக்கெட் விதியால் தோற்ற பங்களாதேஷ்.. தெ.ஆ கடைசியில் வெற்றி

இந்த மாதிரியான ஒரு மைதானத்தில் குறைந்த ஸ்கோர் கொண்ட போட்டிகள் நடைபெறுகிறது. எனவே இங்கு, ஒன்று இரண்டு ரன்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும். அந்த பவுண்டரி மற்றும் 2 வைடுகள் மற்றும் நான் நடுவரின் முடிவு காரணமாக வெளியேறியது என எல்லாமே எங்களுக்கு எதிராக போய்விட்டது. புதிய பேட்ஸ்மேன் களுக்கு ஆடுகளம் பேட்டிங் செய்யும் வகையில் இல்லை. எனவே செட்டிலாகி இருந்த நான் போட்டியை முடித்திருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.