113 ரன்.. பவுண்டரி தராத அம்பயர்.. மோசமான கிரிக்கெட் விதியால் தோற்ற பங்களாதேஷ்.. தெ.ஆ கடைசியில் வெற்றி

0
1056
Bangladesh

இன்று டி20 உலகக்கோப்பை தொடரில் டி பிரிவில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி அமெரிக்கா நியூயார்க் நாசாவ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மோசமான கிரிக்கெட் விதியால் பங்களாதேஷ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.இன்று டி20 உலகக்கோப்பை தொடரில் டி பிரிவில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி அமெரிக்கா நியூயார்க் நாசாவ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மோசமான கிரிக்கெட் விதியால் பங்களாதேஷ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த போட்டிக்கான டாசில் வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம் தைரியமாக பேட்டிங் செய்வதாக அறிவித்தார். தென் ஆப்பிரிக்கா எடுத்த இந்த முடிவு அவர்களுக்கு பேட்டிங்கில் சரியாக உதவவில்லை. 23 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா முக்கிய நான்கு விக்கெட்டுகளை இழந்தது. இதற்கு அடுத்து டேவிட் மில்லர் மற்றும் ஹென்றி கிளாசன் இருவரும் சேர்ந்து 79 பந்துகளுக்கு 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியைக் காப்பாற்றினார்கள்.

- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணிக்கு ஹென்றி கிளாசன் 44 பந்தில் 46 ரன்கள், டேவிட் மில்லர் 38 பந்தில் 29 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். கடைசியாக தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள்தான் எடுக்க முடிந்தது. பங்களாதேஷ் பந்துவீச்சில் தன்சிம் ஹசன் சாகிப் நான்கு ஓவர்களுக்கு 18 ரன் தந்து மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய பங்களாதேஷ் அணிக்கும் டாப் ஆர்டரில் இருந்து சரியான ரன்கள் வரவில்லை. பங்களாதேஷ் அணி 50 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தது. பங்களாதேஷ் அணிக்கு தவ்ஹீத் ஹ்ரிடாய் 34 பந்தில் 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அந்த நேரத்தில் பங்களாதேஷ் வெற்றிக்கு 17 பந்தில் 20 ரன்கள் வெற்றி தேவைப்பட்டது. இதற்கு அடுத்து இறுதியாக கேசவ் மகாராஜ் கடைசி ஓவரை வீச வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் பங்களாதேஷ் அணியால் ஆறு ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியாக தென் ஆப்பிரிக்க அணி பரபரப்பான போட்டியில் நான்கு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இதையும் படிங்க: டிராக்டர் விற்று டிக்கெட்.. இத்தனை லட்சமா விலை.. தோல்விக்கு பின் பாகிஸ்தான் ரசிகர் வருத்தம்

இந்த போட்டியில் மகமதுல்லாவுக்கு பதினாறாவது ஓவரில் எல்பிடபிள்யு கொடுக்கப்பட்டது. ஆனால் அந்தப் பந்து பவுண்டரிக்கு சென்று விட்டது. பங்களாதேஷ் தரப்பில் ரிவ்யூ சென்ற பொழுது அவுட் இல்லை என்று தெரியவந்தது. ஆனால் நடுவர் எல்பிடபிள்யு முடிவு தந்துவிட்டால், அந்த குறிப்பிட்ட பந்தில் எடுக்கும் ரன்கள் தரப்படாது என்கின்ற கிரிக்கெட் விதி இருக்கிறது. இதன் காரணமாக அந்த பவுண்டரி பங்களாதேஷ் அணிக்கு கிடைக்கவில்லை. இறுதியாக பங்களாதேஷ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில்தான் தோற்றது. கிரிக்கெட்டில் இருக்கும் இந்த மோசமான வீதியால் தற்பொழுது பங்களாதேஷ் பரிதாபமாக தோற்று இருக்கிறது. ஏற்கனவே பல கிரிக்கெட் வீரர்கள் இந்த விதியை மாற்ற கேட்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.