பாயிண்ட்ஸ் டேபிளில் கடும் போட்டி ; கொல்கத்தாவிடம் தோற்று ஒரு இடம் பின்தங்கிய ஆர்சிபி!

0
2763
Ipl2023

ஐபிஎல் தொடரின் முதல் பாதி நேற்று முடிவடைந்து, இன்று இரண்டாவது பாதியின் துவக்கப் போட்டியில் பெங்களூர் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிக்கொண்டன!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். கொல்கத்தா அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக வந்த ஜெகதீசன் நாராயணன் மற்றும் ஜேசன் ராய் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 83 ரன்கள் வந்தது. ஜெகதீசன் 27, ஜேசன் ராய் 56 என வெளியேறினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் ஐயர் மற்றும் கேப்டன் நிதிஷ் ராணா இருவரும் 80 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். வெங்கடேஷ் ஐயர் 31, நிதிஷ் ராணா 48, ரசல் 1 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். ரிங்கு சிங் 18, டேவிட் வீசா 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் நின்றார்கள். 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கட்டுகள் இழப்புக்கு கொல்கத்தா 200 ரன்கள் குவித்தது. பெங்களூரு தரப்பில் ஹசரங்கா நான்கு ஓவர்கள் பந்துவீசி 24 ரன்கள் தந்து இரண்டு விக்கட்டுகள் வீழ்த்தினார்.

பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய பெங்களூர் அணிக்கு இந்த முறை பாப் 17, ஷாபாஷ் அகமத் 2, கிளன் மேக்ஸ்வெல் 5 ரன் எடுத்து வெளியேறினார்கள். இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் லோம்புரர் பொறுப்பாக ஆட்டத்தை நகரத்தினார்கள். ஆனால் எதிர்பாராத நேரத்தில் அடுத்தடுத்து லோம்புரர் 34, விராட் கோலி 54 ரன்கள் உடன் வெளியேற பெங்களூரு அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இதற்கு அடுத்து ஒரே நம்பிக்கையாக இருந்த தினேஷ் கார்த்திக் 22, பிரபுதேசாய் 10, ஹசரங்கா 5 என தொடர்ச்சியாக வெளியேறியதால் பெங்களூர் அணியின் வெற்றி வாய்ப்பும் பறிபோனது. இறுதியாக டேவிட் வில்லி 11, வைசாக் 12 ரன்கள் உடன் களத்தில் இருந்தார்கள். 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு பெங்களூரு அணி 179 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தனது மூன்றாவது வெற்றியை பெற்றது. கொல்கத்தா தரப்பில் வருண் சக்கரவர்த்தி நான்கு ஓவர்கள் பந்துவீசி 27 ரன்கள் தந்து மூன்று விக்கட்டுகள் வீழ்த்தினார்!

- Advertisement -

தற்போது புள்ளி பட்டியலில் ஏழு ஆட்டங்களில் 8 புள்ளிகள் உடன் ராஜஸ்தான், லக்னோ, பஞ்சாப் அணிகள் இருக்கிறது. இந்த ஆட்டத்திற்கு முன் ஏழு ஆட்டங்களில் 8 புள்ளிகள் உடன் பெங்களூரு அணியும் இருந்தது. தற்பொழுது கொல்கத்தா அணிவுடன் தோற்றதால் 8 ஆட்டங்களில் 8 புள்ளிகள் என்று பெங்களூரு அணிக்கு சிறிது பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது. 10 அணிகள் ஐபிஎல் தொடரில் வந்ததில் இருந்து புள்ளி பட்டியலில் பிளே ஆப்ஸ் சுற்றுக்கு பெரிய போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது!