தற்போது 2023-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிள் முடிவுக்கு வந்திருக்கிறது. இதற்கு அடுத்து 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளுக்கான மொத்த டெஸ்ட் நாடுகளின் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது.
ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் உள்நாட்டில் இங்கிலாந்து 5, நியூசிலாந்து 4, பங்களாதேஷ் 2 போட்டிகளில் விளையாடுகிறது. வெளியில் வெஸ்ட் இண்டீஸ் 3, சவுத் ஆப்பிரிக்கா 3, இந்தியா 5 போட்டிகளில் விளையாடுகிறது. மேலும் பாகிஸ்தான் இலங்கை அணிகளுக்கு எதிராக போட்டிகள் இல்லை.
பங்களாதேஷ் 12 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் உள்நாட்டில் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக தலா இரண்டு போட்டிகளிலும், வெளிநாட்டில் இலங்கை, சவுத் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக தலா இரண்டு போட்டிகளிலும் விளையாடுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக போட்டிகள் இல்லை.
இங்கிலாந்து 21 டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக விளையாட இருக்கிறது. இதில் சொந்த மண்ணில் இந்தியா 5, நியூசிலாந்து 3, பாகிஸ்தான் 3 போட்டிகளிலும், வெளிநாட்டில் ஆஸ்திரேலியா 5, சவுத் ஆப்பிரிக்கா 3, பங்களாதேஷ் 2 போட்டிகளிலும் விளையாடுகிறது. இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக போட்டிகள் இல்லை.
இந்தியா 18 போட்டிகளில் ஆட இருக்கிறது. இதில் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் 2, சவுத் ஆப்பிரிக்கா 2, ஆஸ்திரேலியா 5 போட்டிகளிலும், வெளிநாட்டில் இங்கிலாந்து 5, இலங்கை 2, நியூசிலாந்து 2 போட்டிகளிலும் விளையாடுகிறது. மேலும் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக போட்டிகள் இல்லை.
நியூசிலாந்து 16 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் 5, இந்தியா 2, இலங்கை 2 போட்டிகளிலும், வெளிநாட்டில் இங்கிலாந்து 3, ஆஸ்திரேலியா 4, பாகிஸ்தான் 2 போட்டிகளிலும் விளையாடுகிறது. பங்களாதேஷ், தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிராக போட்டிகள் இல்லை.
பாகிஸ்தான் 13 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்கா 2, இலங்கை 2, நியூசிலாந்து 2 போட்டிகளிலும், வெளிநாட்டில் பங்களாதேஷ் 2, வெஸ்ட் இண்டீஸ் 2, இங்கிலாந்து 3 போட்டிகளிலும் ஆடுகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாக்கு எதிராக போட்டிகள் இல்லை.
தென் ஆப்பிரிக்கா 14 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் உள்நாட்டில் ஆஸ்திரேலியா 3, பங்களாதேஷ் 2, இங்கிலாந்து 3 போட்டிகளிலும், வெளிநாட்டில் பாகிஸ்தான் 2, இந்தியா 2, இலங்கை 2 போட்டிகளிலும் ஆடுகிறது. மேலும் நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக போட்டிகள் இல்லை.
இலங்கை 12 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் சொந்த மண்ணில் பங்களாதேஷ் இந்தியா தென் ஆப்பிரிக்கா பணிகளுக்கு எதிராக தலா இரண்டு போட்டிகளிலும், வெளிநாட்டில் வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக தலா இரண்டு போட்டிகளிலும் ஆடுகிறது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக போட்டிகள் இல்லை.
இதையும் படிங்க : 100 ஆண்டுகள் கிரிக்கெட்.. கேப்டன் டெம்பா பவுமா படைத்த மெகா சாதனை.. வரலாற்றில் 2வது வீரர்
வெஸ்ட் இண்டீஸ் 14 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா 3, பாகிஸ்தான் 2, இலங்கை 2 போட்டிகளிலும், வெளிநாட்டில் இந்தியா 2, நியூசிலாந்து 3, பங்களாதேஷ் 2 போட்டிகளிலும் ஆடுகிறது. மேலும் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிராக போட்டிகள் இல்லை.