ரோகித் 2ம் இடம்.. 2023-ல் அதிக சிக்ஸர்கள் அடித்த 5 வீரர்கள்.. யாரும் எதிர்பாராத வீரர் முதல் இடம்

0
138

கிரிக்கெட் விளையாட்டு பல பரிணாமங்களைக் கடந்து மக்களின் உணர்வுகளோடு மிகச் சிறந்த பொழுதுபோக்காக இருந்து வருகிறது. மக்கள் தங்களுக்கு விருப்பமான பேட்ஸ்மேன்கள் சிக்ஸர்களை அடிக்கும் பொழுது மகிழ்ச்சியில் கொண்டாடித் திளைக்கின்றனர்.

கிரிக்கெட்டின் தொடக்க காலங்களில் பந்தை தரையோடு அடித்து பவுண்டிற்கு அனுப்புவதே பெரும்பாலும் வழக்கம். டி20 கிரிக்கெட்டின் வரவால் குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் அடிக்கும் நோக்கில் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் தனது உடல் தகுதியை பிட்டாக வைத்து பந்தை எல்லைக் கோட்டிற்கு வெளியே அனுப்பி வருகின்றனர். 2023ம் ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த டாப் 5 வீரர்களை பற்றி காண்போம்.

- Advertisement -

5.டேரி மிட்சல்

நியூசிலாந்தின் அதிரடி வீரரான இவரை சமீபத்தில் நடைபெற்ற மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 கோடிக்கு வாங்கியது. பந்தை நேர்த்தியாக எல்லை கோட்டுக்கு அனுப்பும் திறன் கொண்டவர். இவர் நியூசிலாந்து அணிக்காக 52 ஆட்டங்களில் 61 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இந்த வலது கை ஆட்டக்காரரின் கணிசமான செயல்பாடு நியூசிலாந்து அணிக்குக் குறிப்பிடத்தக்க வெற்றிகளை கொடுத்துள்ளன. இவர் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

4.மிச்சல் மார்ஷ்

- Advertisement -

ஆஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரரான மிட்சல் மார்ஷ் 33 ஆட்டங்கள் விளையாடி 61 சிக்ஸர்களை விளாசியுள்ளார். வலது கை ஆட்டக்காரர் ஆன இவர் சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் மிக முக்கியப் பங்காற்றி ஆஸ்திரேலியா அணிக்கு வெற்றிகளை குவித்தார். இவர் தற்போது நான்காவது இடத்தில் உள்ளார்.

3.குஷால் மல்லா

கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் நட்சத்திரமான குஷால் மல்லா நேபாள அணிக்காக விளையாடி வருகிறார். 19 வயது இளைஞரான இவர் வெறும் 32 ஆட்டங்களில் விளையாடி 65 சிக்சர்கள் விளாசியுள்ளார். இவரது அபாரமான வளர்ச்சி நேபாள கிரிக்கெட்டையும் தற்போது உயர்த்தி வருகிறது. இவரது அதிரடியான ஆட்ட அணுகுமுறை நேபாள அணியின் பேட்டிங் வரிசையை வலுப்படுத்தி உள்ளது என்றே கூறலாம். இவர் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

2.ரோஹித் ஷர்மா

இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா. இவரது ஃபுல் ஷாட் சிக்ஸர்க்கு உலகில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் 35 ஆட்டங்களில் விளையாடி 80 சிக்ஸர்களை அடித்துள்ளார். இவரது அட்டகாசமான கேப்டன்சி திறமையால் இந்திய அணி உலக கோப்பையில் இறுதிப் போட்டி வரை முன்னேறியது. இவரது ஆக்ரோஷமான தொடக்க ஆட்ட அணுகுமுறை பின்னால் வரும் வீரர்களை எந்த அச்சமும் இன்றி நிதானமாக விளையாட வழி வகுத்து கொடுத்துள்ளது. 2023 உலக கோப்பையில் அதிக சிக்சர் அடித்தவர்களின் பட்டியலில் கிறிஸ் கெயிலை பின்னுக்குத் தள்ளி முன்னிலை வகிக்கிறார்.

1.முகமது வசீம்

ஐக்கிய அரபு எமிரேட்டின் அனுபவமிக்க கிரிக்கெட் வீரரான முகமது வசீம், இந்த ஆண்டில் அதிக சிக்ஸர் அடித்தவர்களின் பட்டியலில் முதல் இடத்திற்குச் சென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். வலது கை ஆட்டக்காரரான இவர் வெறும் 47 போட்டிகள் மட்டுமே விளையாடி 101 சிக்சர்களை விளாசி கிரிக்கெட் வரலாற்றில் தனது பெயரை ஆணித்தரமாக பொருத்தியுள்ளார். இவரது இந்த அபார சாதனை ஒரு ஆண்டில் 100 சிக்சர் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுக் கொடுத்துள்ளது. இவரது இந்த ஆக்ரோஷமான அணுகுமுறை கிரிக்கெட் உலகில் இவரை கவனிக்கப்பட வேண்டிய வீரராக மாற்றி இருக்கிறது.