“நாளை மும்பை மைதானத்தை சத்தம் இல்லாம செய்ய போறோம்!” – சான்ட்னர் சவால் பேச்சு!

0
3118
Santner

இங்கிலாந்தில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை வெல்ல இந்திய அணிக்கு மிகச்சிறந்த வாய்ப்பு இருந்தது.

அந்த நேரத்தில் தேவைக்கு சரியான பந்துவீச்சு படையும், அதே சமயத்தில் பேட்டிங் யூனிட்டில் எல்லா பகுதிகளும் சிறப்பான வீரர்களும் இருந்தார்கள். குறிப்பாக இறுதிக்கட்டத்தில் மகேந்திர சிங் தோனி இருந்தது, இந்திய அணிக்கு பெரிய பலமாக இருந்தது.

- Advertisement -

அந்தக் குறிப்பிட்ட உலகக் கோப்பையில் இந்திய அணி அரையிறுதியில் 240 ரன்களை துரத்த முடியாமல் நியூசிலாந்து அணி இடம் வீழ்ந்தது இந்திய கிரிக்கெட்டில் பெரிய அதிர்ச்சிகளை உருவாக்கியது. விராட் கோலியின் கேப்டன்சி மாற்றத்தில் அந்த தோல்விக்கு முக்கிய பங்கு உண்டு.

நான்கு வருடங்கள் கழித்து தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும், முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை சந்தித்து விளையாட இருக்கிறது.

பழைய கசப்பான நினைவுகள் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மீண்டும் திரும்ப வந்து கொண்டிருக்கிறது. அதே சமயத்தில் இதை நேர்மறையாக நியூசிலாந்து வீரர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -

இதுகுறித்து நியூசிலாந்து அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளர் மிட்சல் சான்ட்னர் கூறும் பொழுது “மும்பை மைதானத்தில் நாங்கள் மக்கள் சத்தம் இல்லாமல் இருப்பதை கேட்க முடியும் என்று நம்புகிறோம். அப்படி நடந்தால் அங்கிருந்து எங்களுக்கு எல்லாமே சரியானதாக நடக்கும்.

நாங்கள் முதலில் ஆடுகளத்தை பார்த்து என்ன நடக்கிறது என்று முடிவு செய்வோம். ஆனால் அவர்களின் முதல் ஆறு இல்லை ஏழு பேட்ஸ்மேன்கள் எவ்வளவு அழிவுகரமானவர்கள் என்று எங்களுக்கு தெரியும்.

இப்படியான இந்திய பேட்ஸ்மேன்களை மெதுவாக்குவதற்கான ஒரே வழி, அவர்களின் ஆரம்ப விக்கெட்டுகளை நாங்கள் ஆரம்பத்திலேயே வீழ்த்துவது மட்டும்தான். எனவே வெளிப்படையாக நாங்கள் செய்ய வேண்டிய ஒரு பெரிய பகுதி!” இது என்று கூறியிருக்கிறார்!

நாளை இரண்டு அணிகளுக்குமே டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய வேண்டியது முக்கியமானதாக இருக்கிறது. எனவே இந்த போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்று பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது!