நான் அஸ்வினுக்கு எதிரானவனா?.. சஞ்சு சாம்சன் பண்ணது அர்த்தமே இல்லை – டாம் மூடி விமர்சனம்

0
31
Sanju

நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சொந்த மைதானத்தில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 196 ரன்கள் குறித்தும் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. குறிப்பாக நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் இரண்டாவது பந்து வீசும் போது பனிப்பொழிவும் இல்லை. இதன் காரணமாக கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலர்களை பயன்படுத்திய விதம் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இதுகுறித்து டாம் மூடி தன்னுடைய விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சஞ்சு சாம்சன் 68 மற்றும் ரியான் பராக் 76 ரன்கள் எடுக்க, அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. அந்த அணியின் பந்துவீச்சு வரிசையை வைத்து பார்க்கும் பொழுது எப்படியும் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி தொடர்ச்சியாக ஐந்தாவது வெற்றியை பதிவு செய்யும் என பலரும் நினைத்தார்கள்.

- Advertisement -

இப்படியான நிலையில்தான் இறுதிக் கட்டத்தில் 11 பந்தில் ராகுல் திவாட்டியா 22 ரன்கள், 11 பந்தில் ரஷீத் கான் 24 ரன்கள் என எடுத்து ஆட்டத்தை குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மாற்றினார்கள். நேற்றைய போட்டியில் தேவையான ரன்கள் இருந்தது, அதே சமயத்தில் பனிப்பொழிவும் இல்லை. இப்படி இருந்தும் நல்ல பந்து வீச்சு வரிசையை வைத்து சஞ்சு சாம்சனால் வெல்ல முடியாதது விமர்சனம் ஆகி வருகிறது.

குறிப்பாக நேற்று வேகப் பந்துவீச்சாளர் டிரென்ட் போல்ட் இரண்டு ஓவர்கள் பந்து வீசி எட்டு ரன்கள் மட்டுமே விட்டுத் தந்திருந்தார். இந்த நிலையில் 17வது ஓவரை ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கொடுக்க அவர் 17 ரன்கள் கொடுத்தார். தற்பொழுது இதுதான் பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

இதுகுறித்து ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் டாம் மூடி கூறும் பொழுது “நிச்சயமாக அந்த நேரத்தில் பந்து வீச்சுக்கு போல்டைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருந்தது. அவர் இறுதிக் கட்ட ஓவர்களில் பந்து வீசி ஏற்கனவே நல்ல அனுபவத்தை பெற்றவராக இருக்கிறார். எனவே அந்த நேரத்தின் அழுத்தத்தை உள்வாங்கி அவர் பழகிவிட்டார். அவருக்கு இரண்டு ஓவர்கள் மீதம் இருக்கும் நிலையில், அவரை பயன்படுத்தாமல் இருந்ததில் எந்த அர்த்தமுமே இல்லை.

- Advertisement -

இதையும் படிங்க : மும்பை இந்தியன்ஸ் இளம் வீரர் காயத்தால் விலகல்.. ஆனால் புதிதாக கிடைத்த ஜாக்பாட் வீரர் – முழு விபரம்

நான் இதை அஸ்வினுக்கு எதிராக சொல்லவில்லை. அவர் ஒரு தரமான பந்துவீச்சாளர். ஆனால் அவரும் சாகலும் நேற்று எட்டு ஓவர்கள் பந்து வீசி 83 ரன்கள் கொடுத்திருந்தார்கள். இது மிகவும் தவறாக சென்று விட்டது. எந்தவித காயமும் இல்லாமல் நேற்று போல்ட்டு தன்னுடைய இரண்டு ஓவர்களை தவற விட்டு இருக்கக் கூடாது” என்று கூறி இருக்கிறார்.