வீடியோ: சீனியர் பவுலரிடம் சுதாரித்து, கத்துக்குட்டியிடன் விக்கெட் விட்ட விராட் கோலி; சோகமாக வெளியேற்றம்!

0
541

உணவு இடைவேளை முடிந்து வந்த முதல் பாலே ஸ்பின்னரிடம் பரிதாபமாக விக்கெட் விட்டு வெளியேறினார் விராட் கோலி. வீடியோ கீழே உள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா விளையாடி வரும் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முதல் நாள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் அடித்திருந்தது.

- Advertisement -

இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரோகித் சர்மா இருவரும் ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சாளர்களை நன்றாக எதிர்கொண்டு சீரான இடைவெளிகளில் ரன்களை சேர்த்து வந்தனர்

துரதிஷ்டவசமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 23 ரன்களுக்கு டாட் மர்பி பந்தில் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த புஜாரா ஆட்டத்தை நன்றாக ஆரம்பித்தார். ஆனால் அதை பெரிய ஸ்கோர் ஆக எடுத்துச் செல்ல முடியாமல் டாட் மர்பி பந்தில் தவறான ஷார்ட் அடித்து ஆட்டம் இழந்தார்.

உணவு இடைவேளைக்கு முன்பு வரை, 85 ரன்கள் எடுத்து ரோகித் சர்மாவும் 12 ரன்களுடன் விராட் கோலியும் களத்தில் இருந்தனர். மூன்று விக்கெடுகளை இழந்திருந்த இந்திய அணி 151 ரன்கள் அடித்திருந்தது.

- Advertisement -

26 ரன்கள் மட்டுமே பின் தங்கியிருந்த நிலையில், உணவு இடைவேளைக்குப் பிறகு உள்ளே வந்து ஆட்டத்தை துவங்கிய விராட் கோலி துரதிஷ்டவசமாக டார்க் மர்ஃபி பந்தில் அவுட் ஆனார். ஏற்கனவே சுழல் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக திணறும் விராட் கோலி, மீண்டும் ஒருமுறை சுழல் பந்துவீச்சாளருக்கு ஆட்டமிழந்து வெளியேறியது பெருத்த ஏமாற்றத்தை கொடுத்தது.

இந்திய அணி இழந்திருந்த நான்கு விக்கெட்டுகளையும் டாட் மர்பி கைப்பற்றினார். அறிமுகப் போட்டியில் இப்படி முதல் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றியது அவருக்கு சாதனையாகவும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.