“இன்னைக்கு போட்டி இந்தியா இலங்கைக்கு இல்ல.. இந்த ரெண்டு பிளேயர்க்குதான்!” – இந்திய முன்னாள் வீரர் பரபரப்பான பேச்சு!

0
607
ICT

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இலங்கை அணியை எதிர்த்து உள்நாட்டு அணியான இந்தியா விளையாட இருக்கிறது!

இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெறும் என பல கருத்துக்கணிப்புகள் இருக்கின்றன. இலங்கையணி பொறுத்தவரை நிலையான செயல்பாடு அவர்களிடம் வெளிப்படுவதில்லை. இங்கிலாந்துடன் வென்று ஆப்கானிஸ்தான் உடன் தோற்கும் அளவிற்கு இருக்கிறார்கள்.

- Advertisement -

இன்னொரு பக்கத்தில் இந்திய அணியை எடுத்துக் கொண்டால் பேட்டிங் யூனிட் மற்றும் பவுலிங் யூனிட் என இரண்டும் உலக தரத்தில் இருக்கிறது. பேட்டிங்கில் எந்த ஒரு சரிவு வந்தாலும் அதை ஈடுகட்ட ஏதாவது ஒரு ஜோடி இந்திய தரப்பில் மிகச் சிறப்பாக செயல்படுகிறது.

அதே சமயத்தில் இந்திய பவுலிங் யூனிட்தான் பேட்டிங் யூனிட்டை விட மிகச் சிறந்த உலகத் தரத்தில் இருக்கிறது என்று கூற வேண்டும். காரணம் ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப மிக விரைவாக மாறி, அபாரமான செயல்பாட்டின் மூலம் புத்திசாலித்தனமாக விக்கெட்டுகளை கைப்பற்றி எதிரணிக்கு நெருக்கடி தருவதோடு, தன் அணியின் பேட்ஸ்மேன்களுக்கு வசதி செய்து கொடுக்கிறார்கள்.

மேலும் இன்றைய போட்டியில் சரியாக செயல்படாத ஸ்ரேயாஸ் ஐயருக்கு மேலும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று தெரிகிறது. அடுத்த போட்டிக்கும் ஹர்திக் பாண்டியா வர மாட்டார் என்கின்ற காரணத்தினால் சூரியகுமார் யாதவுக்கு வாய்ப்புகள் தொடர்ச்சியாக கிடைக்கும்.

- Advertisement -

இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “ஹர்திக் பாண்டியா இந்த போட்டிக்கும் அடுத்த போட்டிக்கு கிடைக்க மாட்டார் என்பதால், சூரியகுமார் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள மேலும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஹர்திக் பாண்டியா நேரடியாக அரைஇறுதிக்கு வருவார் என்று கூறப்படுகிறது. எனவே இது ஸ்ரேயாஸ் ஐயருக்கும் சூரிய குமாருக்கும் இடையிலான போட்டியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

கில் இதுவரை பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் மட்டுமே சிறப்பான முறையில் ரன் அடித்திருக்கிறார். அதற்கு அடுத்து அவரிடம் இருந்து ரன் வரவில்லை. பந்தில் அசைவு இருக்கும் பொழுது இந்தியா தடுமாறியது தெரிந்தது. ஆனால் மும்பையில் அப்படி இருக்காது. எனவே அவர் இன்று ரன்கள் அடிப்பார் என்று நம்புகிறேன்!” என்று கூறியிருக்கிறார்!