சிஎஸ்கே அணியில் இரண்டு மாற்றங்கள்… இன்றைய பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும் – கணிப்பு!

0
245

இன்று சேப்பாக்கம் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகிறது. ஆகையால் தோனியை 4 வருடங்களுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் காணப்போகிறோம் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகவும் உச்சத்தில் இருக்கிறது.

- Advertisement -

இந்த சீசனின் முதல் போட்டியில் குஜராத் அணியை எதிர்கொண்டு தோல்வியை தழுவியதால் சென்னை மைதானத்தில் நடக்கும் இப்போட்டி சிஎஸ்கே அணிக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன் இன்றைய போட்டிக்கு எப்படி இருக்கும்? யார் உள்ளே கொண்டுவரப்படலாம்? யார் யார் வெளியே அமர்த்தப்படலாம்? என்கிற வகையில் கணிக்கப்பட்டிருக்கிறது. அவற்றை பின்வருமாறு காண்போம்.

முதலாவதாக டெவான் கான்வே வெளியில் அமர்த்தப்பட்டு அவருக்கு பதிலாக அஜிங்கியா ரகானே உள்ளே எடுத்து வரப்படலாம். சென்னை மைதானத்தில் அதிக ஸ்கோர் அடிக்கக்கூடிய பிட்ச் கிடையாது. இங்கு ஸ்பின்னர்களுக்கு நன்றாக எடுபடும்.

- Advertisement -

டெவான் கான்வெ ஸ்பின்னர்களுக்கு திணறியுள்ளார். அவரை பிளேயிங் லெவனில் வைத்திருப்பது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. அதேநேரம் ரகானே பவர்-பிளே ஓவர்களில் மிகச்சிறப்பாக விளையாடக்கூடியவர். ஸ்பின்னர்களை நன்றாக எதிர்கொண்டு ரன்கள் அடிக்கக்கூடியவர் என்கிற வகையில் இந்த மாற்றம் செய்யப்படலாம்.

அதேபோல் சிவம் தூபே ஸ்பின்னர்களுக்கு மிகவும் திணறியுள்ளார். மேலும் பந்து ஸ்லோவாக வரும்பொழுது அவரால் சரிவர ரன்குவிக்க முடியாமல் இருந்திருக்கிறது. அதேபோல் டெத் ஓவர்களில் சிஎஸ்கே அணிக்கு பிரச்சனை இருந்திருக்கிறது. ஆகையால் டிவைன் பிரிட்டோரியஸ் மாற்றாக உள்ளே எடுத்துவரப்படலாம்.

அவர் ஸ்பின்னர்களை நன்றாக விளையாடக் கூடியவர். வேகப்பந்துவீச்சாளர்களுக்கு பழக்கப்பட்டவர். மேலும் டெத் ஓவர்களில் பல்வேறு வேரியேஷன்கள் கொடுத்து ரன்களை கட்டுப்படுத்தக்கூடியவர். அனைத்து வகையிலும் இவர் சரியாக இருப்பதால் இவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்புகள் கிடைக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. இந்த இரண்டு மாற்றங்களுடன் சிஎஸ்கே அணி இன்றைய போட்டியில் களமிறங்கலாம்.

சிஎஸ்கே அணியின் உத்தேச பிளேயிங் லெவன்:

  1. ருத்துராஜ் கெய்க்வாட்
  2. அஜிங்கியா ரகானே
  3. மொயின் அலி
  4. பென் ஸ்டோக்ஸ்
  5. அம்பத்தி ராயுடு
  6. ரவீந்திர ஜடேஜா
  7. மகேந்திர சிங் தோனி
  8. டிவைன் பிரிட்டோரியஸ்
  9. தீபக் சஹர்
  10. மிட்ச்சல் சான்ட்னர்
  11. ராஜ்வர்தன் ஹன்கரேக்கர்