“இன்னைக்கு ஒரு முடிவு செஞ்சேன்.. ஒரு விஷயத்துக்கு பயிற்சியும் செஞ்சேன்!” – ஆட்டநாயகன் ஸ்ரேயாஸ் அதிரடி பேட்டி!

0
1946
Shreyas

நடப்பு 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றின் கடைசி போட்டி இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே பெங்களூர் மைதானத்தில் நடைபெற்றது.

இன்று இந்திய கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் ரோஹித் சர்மா 61, கில் 51, விராட் கோலி 51 என மூவரும் அரை சதங்கள் எடுத்து வெளியேறினார்கள்.

- Advertisement -

இந்திய அணி 200 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் என்று இருந்த பொழுது, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே எல் ராகுல் இருவரும் ஜோடி சேர்ந்து பொறுப்பாகவும் அதே சமயத்தில் அதிரடியாகவும் விளையாட ஆரம்பித்தார்கள்.

இந்த ஜோடி மிகச் சிறப்பாக விளையாடி அதிரடியாக 208 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. கேஎல்.ராகுல் 64 பந்தில் அதிரடியாக 102 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இறுதி வரை களத்தில் நின்று மிகச் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 94 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்கள் உடன் 128 ரன்கள் எடுத்தார். இதுவே அவரது உலகக்கோப்பையில் முதல் சதமாகவும் அமைந்தது. இந்த போட்டியில் கையில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு மீண்டும் தசைப்பிடிப்பு வந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து பெரிய இலக்கை நோக்கி விளையாடிய நெதர்லாந்து அணி 250 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் தேஜா மட்டும் 54 ரன்கள் எடுத்தார்.

இந்த போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டநாயகன் விருது பெற்று பேசிய பொழுது “நான் இன்று தேஜாவூவில் இருந்தேன். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக எனக்கு எப்படி கையில் தசை பிடிப்பு ஏற்பட்டதோ இன்றும் அப்படியே ஏற்பட்டது. நான் அப்பொழுது எனது விக்கெட்டை விட்டு விட்டேன்.

ஆனால் இந்த முறை நான் எனது விக்கெட்டை விடக்கூடாது என்று இருந்தேன். ஆடுகளத்தில் இரு வேறு விதமான வேகம் இருந்தது. இதனால் நான் என்னுடைய தொடக்கத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன்.

நான் பந்தை நேராக அடிப்பதற்கு வலைப்பயிற்சியில் நிறைய பயிற்சி செய்து வருகிறேன். தலையை கீழே வைத்து, சரியான பொசிஷனுக்கு வந்து, பேட்டை சுழற்றி தோள்பட்டையின் பின்பக்கம் முடிக்க வேண்டியது அவசியம். இப்படித்தான் நான் அப்படியான ஷாட்களை விளையாடி வருகிறேன்!” என்று கூறியிருக்கிறார்!