இவருக்கு உலகக்கோப்பைல இடம் இருக்கும் என தெரியல ஆனா… தினேஷ் கார்த்திக் கருத்து!

0
116
DK

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்டின் ஒரு நாள் மற்றும் டி20 ஆட்டங்களுக்கான பார்ம் தொடர்ந்து விவாதங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது . சமீபத்திய நியூஸிலாந்து தொடரின் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் ரிஷப் பண்ட் சரியாக சோபிக்கவில்லை . இதனை அடுத்து அவர் மீதான விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன .

இந்நிலையில் இந்திய டி20 அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் ரிஷப் பண்டிற்கு ஆதரவு கரம் நீட்டி உள்ளார் . இது குறித்து பேசி உள்ள அவர் “வர இருக்கின்ற ஒரு நாள் போட்டிகளில் அதிகமான வாய்ப்புகளை அவருக்கு வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார் .,

கிரிக்பஸ் இணையதளத்திற்கு பேட்டி அளித்த தினேஷ் கார்த்திக் ” ரிஷப் பண்ட்டை விமர்சிப்பவர்கள் ஒரு நாள் மட்டும் டி20 போட்டிகளை தனித்தனியாக அணுக வேண்டும் இரண்டையும் பொதுவாக எடுத்து அவர் மோசமாக செயல்பட்டதாக பொதுவாக கருதுவது சரியான அணுகுமுறை இல்லை ” என்று கூறினார் .,

இது பற்றி விரிவாக பேசிய கார்த்திக் ” ரிசப் பண்டின் கடந்த பத்து ஒருநாள் ஆட்டங்களை எடுத்துப் பார்த்தால் அதில் அவர் சராசரியாக 45 வைத்திருக்கிறார் . மேலும் ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் அவர் ஆட்டம் இழக்காமல் 125 ரன்கள் எடுத்து இந்திய அணி தொடரை வெல்ல காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது” என்று கூறினார் .

இது தொடர்பாக மேலும் பேசிய தினேஷ் கார்த்திக் “டி20 போட்டிகளை மட்டுமே வைத்துக் கொண்டு அவர் சரியாக ஆடவில்லை அதனால் அவரை ஒரு நாள் போட்டியில் சேர்ப்பது சரியில்லை என்று கூறுவது ஒரு தவறான அணுகுமுறை ,’கே எல் ராகுல்’ விக்கெட் கீப்பராக தொடர்வாரா என்று உறுதியாக தெரியாத நிலையில் 2023 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை போட்டிகளுக்கு முன்பாக ரிசப் பண்டிற்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் ஒருவேளை அவர் தன்னை நிரூபிக்க தவறும் பட்சத்தில் அணி நிர்வாகம் அவரைக் கடந்து செல்லலாம் ” என்று கூறினார் .

பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் ரிஷப் பண்ட் இடம் பெற்றிருந்தார் . முதலாவது போட்டி தூக்குவதற்கு முன்பாக அவர் மருத்துவ காரணங்களுக்காக அணியில் இருந்து விலகியதாக இந்திய அணி நிர்வாகம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது .