“இந்திய அணியின் பவுலிங்கை சமாளிக்க.. இதை செய்யுங்க” – மேக்ஸ்வெல் எதிரணிகளுக்கு கொடுக்கும் ஐடியா!

0
15087
Maxwell

நடப்பு உலகக்கோப்பை தொடர் 75% முடிவடைந்து இருக்கிறது என்று கூறலாம். இந்த நிலையில் அரையிறுதிக்கு தற்பொழுது இந்தியா தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்று இருக்கின்றன. நியூசிலாந்து அணி ஏறக்குறைய 99 சதவீதம் தகுதி பெற்று இருக்கிறது.

இந்த நிலையில் ஒவ்வொரு அணிகளின் அரையிறுதி பயணத்தை எடுத்து வைத்து பார்த்தால், அதில் இந்திய அணியின் அரையிறுதி பயணம் மிகவும் அதிரடியாக இருக்கிறது.

- Advertisement -

தற்போதைய இந்திய அணியை எடுத்துக் கொண்டால் அவர்கள் எல்லாவற்றிலும் சம பலத்தைக் கொண்ட ஒரு அணியாக இருக்கிறார்கள். மேலும் அணிக்குள் வீரர்கள் இடையே நல்ல ஒற்றுமை இருக்கிறது. அவர்கள் ஒட்டுமொத்தமாக நம்பிக்கை பெற்றவர்களாகவும்Z மகிழ்ச்சியானவர்களாகவும் இருக்கிறார்கள். இதுவெல்லாம் சேர்ந்து அவர்களை வெல்வதற்கு கடினமானவர்களாக மாற்றுகிறது.

தற்போதைய இந்திய அணியின் பலம் எதுவென்று பார்த்தால் பேட்டிங் யூனிட்டை விட பவுலிங் யூனிட் கொஞ்சம் முன்னணியில் இருக்கிறது என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் பேட்டிங் யூனிட் மேல் இருக்கும் நெருக்கடியை பவுலிங் யூனிட் குறைத்து இருக்கிறது.

இந்திய விளையாடும் அணியில் பவுலிங் யூனிட்டில் இடம்பெறும் ஐந்து பந்துவீச்சாளர்களும் உலகத் தரத்தில் இருக்கிறார்கள். பெரும்பாலும் வேகப்பந்துவீச்சாளர்கள் சுழற் பந்துவீச்சாளர்களைக் கொண்டு வரும் தேவையை குறைத்து விடுகிறார்கள். ஒருவேளை சுழற் பந்துவீச்சாளர்கள் வந்துதான் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால், அவர்கள் வந்த உடனே தாக்கத்தை உண்டாக்குகிறார்கள்.

- Advertisement -

இதனால் இந்திய அணிக்கு எதிராக விளையாடுவது எதிரணிகளுக்கு பெரிய கடினமான சவாலான விஷயமாக இருந்து வருகிறது. தற்பொழுது இந்திய அணியின் பவுலிங் யூனிட்டை என்ன செய்தால் சமாளிக்க முடியும்? என்கின்ற தன் பார்வையை மேக்ஸ்வெல் முன் வைத்திருக்கிறார்.

இதுகுறித்து மேக்ஸ்வெல் கூறும்பொழுது “தற்பொழுது இந்திய அணி மிகவும் அழகாக பந்து வீசுகிறது. தற்போது உலகில் மிக நேரான சீம் கொண்ட பவுலர் முகமது சமிதான். நெதர்லாந்து அவர்களை எதிர்கொள்ள முடியாது.

இந்திய அணியின் பவுலிங் யூனிட் எதிர்கொள்ள வேண்டும் என்றால், அவர்களின் வேகப்பந்துவீச்சாளர்களை ஆரம்பத்திலேயே பெரிய ஷாட்கள் விளையாடி, சுழற் பந்துவீச்சாளர்களை முன்கூட்டியே கொண்டுவர பார்க்க வேண்டும். இது மட்டும்தான் சிறந்த வழி.

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது சமி சிறப்பாக இருக்கிறார். பும்ரா அற்புதமாக பந்து வீசுகிறார். சிராஜ் நன்றாகத் தாக்குப் பிடிக்கக் கூடிய வீரர். ஆனால் அவர் பந்தை ஸ்விங் செய்தால், அவரை கையாள்வது கடினமான விஷயம்!” என்று கூறி இருக்கிறார்!