11 பந்தில் 39 ரன்கள்.. கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து பினிஷ் செய்த 20 வயது வீரர்! – அஸ்வினின் திண்டுக்கல் அணியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறிய நெல்லை!

0
1649

குவாலிபையர் 2-இல் நெல்லை வீரர் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து அபாரமாக பினிஷ் செய்ய, திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது நெல்லை ராயல் கிங்ஸ் அணி.

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே லைக்கா கோவை கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி. இன்று நடைபெற்ற இரண்டாவது குவாலிபயர் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை எதிர்கொண்டது.

- Advertisement -

போட்டியில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர் விமல் குமார் 16 ரன்களுக்கு அவுட் ஆனார்.

இரண்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த சிவம் சிங் மற்றும் பூபதி குமார் இருவரும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வலுவான நிலைக்கு எடுத்துச் சென்றனர். இதில் சிவம் சிங் 46 பந்துகளுக்கு 76 ரன்களும், பூபதி குமாரும் 28 பந்துகளுக்கு 41 ரன்கள் விளாசினர்.

மற்ற வீரர்கள் ஆங்காங்கே சிறு பங்களிப்பை கொடுத்ததால், 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 185 ரன்கள் குவித்தது.

- Advertisement -

சற்று கடினமான இலக்கை துரத்திய நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு கேப்டன் மற்றும் துவக்க வீரர் அருண் கார்த்திக் 26 ரன்களுக்கு அவுட் ஆனார். மற்றொரு துவக்க வீரர் சுகேந்திரன் 22 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த அஜித்தேஷ் ஒரு பக்கம் நின்று கொண்டு பவுண்டரி மற்றும் சிக்சர்களாக விளாசி வந்தார். இவருக்கு பக்க பலமாக இருந்த நிதிஷ் 26 ரன்கள் அடித்திருந்தபோது, பேட்டிங்கில் இருந்து விலகிக்கொண்டு உள்ளே சென்று விட்டார்.

அதன் பிறகு உள்ளே வந்த ரித்திக் ஈஸ்வரன் அபாரமாக விளையாடி வந்த அஜித்தேஷ் உடன் ஜோடி சேர்ந்து வானவேடிக்கை காட்டினார். இதில் ரித்திக் ஈஸ்வரன் உள்ளே வந்த போது 15 பந்துகளுக்கு 49 ரன்கள் தேவைப்பட்டது.

அந்த சமயத்தில் ஆறு சிக்ஸர்களை விளாசிய ரித்திக் ஈஸ்வரன் 11 பந்துகளில் 39 ரன்கள் அடித்து மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தினார். மறுபக்கம் நின்று 5 சிக்ஸர்கள் மற்றும் ஐந்து பௌண்டரிகள் விளாசிய அஜித்தேஷ் 73 ரன்கள் அடித்தார்.

பரபரப்பாக சென்றுகொண்டிருந்த போட்டியின் கடைசி பந்தில் சிக்சர் அடித்த ரித்திக் ஈஸ்வரன், நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறுவதற்கு முக்கிய பங்காற்றினார். 20 ஓவர்களில் மூன்று விக்கெடுகள் இழப்பிற்கு 191 ரன்கள் அடித்திருந்த நெல்லை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வருகிற 12-ம் தேதி நடைபெற உள்ள பைனலில் லைக்கா கோவை கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது நெல்லை ராயல் கிங்ஸ்.