“முதல்முறையாக நடைபெறும் டிஎன்பிஎல் ஏலம்”… “அதிக விலைக்குச் சென்ற சகோதரர்கள்” ….. “சர்வதேச கிரிக்கெட் வீரர்களை மிஞ்சிய உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள்” !

0
2816

தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் வருடம் தோறும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடத்தப்படும் டி20 தொடராகும். இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளைப் போல எட்டு அணிகள் பங்கு பெறும் இந்த கிரிக்கெட் தொடர் வருடம் தோறும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த கிரிக்கெட் போட்டிகள் தமிழக அளவில் சர்வதேச தரம் கொண்ட பல்வேறு கிரிக்கெட் வீரர்களை அடையாளம் காண ஒரு வாய்ப்பாக அமைகிறது. இந்திய அணிக்காக ஆடிய நடராஜன் போன்ற சிறப்பான கிரிக்கெட் வீரர்கள் இந்த போட்டிகளின் மூலமாகவே ரசிகர்களுக்கு அறிமுகம் ஆயினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டிகளில் சென்னை திண்டுக்கல் கோவை திருச்சி திருநெல்வேலி சேலம் திருப்பூர் மற்றும் மதுரை ஆகிய எட்டு நகரங்களை மையமாகக் கொண்ட எட்டு அணிகள் பங்கேற்கும் போட்டி தொடராகும். இந்தப் போட்டி தொடர்களில் சென்னையை மையமாகக் கொண்ட சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி அதிகபட்சமாக நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்று இருக்கிறது.

- Advertisement -

இந்த டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகளின் ஏழாவது சீசன் வருகின்ற ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் துவங்க இருக்கிறது. இதற்கான ஏலம் ஆறு வருடங்களுக்குப் பிறகு சென்னை மகாபலிபுரத்தில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் தமிழகத்தைச் சார்ந்த 942 வீரர்கள் பங்கு பெறுகின்றனர். ஐபிஎல் அணிகளுக்கான ஏலத்தைப் போலவே இந்த வீரர்களின் ஏழு முகம் நடைபெற்று வருகிறது.

இரண்டு நாட்கள் நடைபெற இருக்கும் இந்த ஏலத்தில் சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாடிய தகுதிகளின் அடிப்படையில் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஏழாம் நடைபெறுகிறது. ஒவ்வொரு அணிக்கும் அதிகபட்சமாக 70 லட்சம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 16 வீரர்கள் முதல் அதிகபட்சமாக 20 வீரர்கள் வரை ஏலம் எடுத்துக் கொள்ளலாம் . இது தமிழ்நாடு பிரீமியர் லீ கிரிக்கெட் போட்டிகளில் முதல் முறையாக இயலும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் நடைபெற்ற சீசன்களில் வீரர்கள் கிராஃப்ட் முறையில் தேர்வு செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதலில் நடைபெற்ற ஏ பிரிவு வீரர்களுக்கான ஏலத்தில் இந்தியா அணிக்காக சர்வதேச போட்டிகளில் ஆடிய ஐந்து வீரர்களிடம் பெற்றனர். அவர்களில் விஜய் சங்கரை 10.25 லட்சத்துக்கு திருப்பூர் தமிழன் அணி வாங்கியது. தற்போது இந்திய அணிக்காக ஆடிவரும் வாஷிங்டன் சுந்தரை மதுரை பாந்தர்ஸ் அணி 6.75 லட்ச ரூபாய்க்கு வாங்கியது‌. இந்திய அணிக்காக ஆடிய வேகப்பந்துவீச்சாளர் நடராஜனை 6.25 லட்ச ரூபாய்க்கு திருச்சி அணி ஏலத்தில் எடுத்தது . சர்வதேச வீரர்களை விட கடந்த டி என் பி எல் போட்டிகளில் சிறப்பாக ஆடிய உள்ளூர் வீரர்களுக்கே ஏலத்தில் கடும் போட்டி நிலவேது என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டு டிஎன்பிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய சோனு யாதவ் 15.20 லட்ச ரூபாய்க்கு நெல்லை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது. சஞ்சய் யாதவ் என்ற வீரரை 17.60 லட்ச ரூபாய்க்கு சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி வாங்கியது. தமிழக வீரர் சாய் சுதர்சன் இந்த ஏலத்தில் அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் சுதர்சன் 21.60 லட்ச ரூபாய்க்கு லைக்கா கோவை கிங்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். இவர் நடந்து முடிந்த ரஞ்சி கோப்பை மற்றும் விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டிகளில் தமிழக அணிக்காக சிறப்பாக ஆடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இன்று நடைபெற்ற ஏலத்தில் எந்தெந்த வீரர்கள் எந்தெந்த அணியால் வாங்கப்பட்டிருக்கிறார்கள் என்று பார்ப்போம்:

சாய் சுதர்சன் 21.60 லட்சம்
லைக்கா கோவை கிங்ஸ்

சஞ்சய் யாதவ் 17.60 லட்சம்
சேப்பாக் சூப்பர் கில்லிஸ்

சோனு யாதவ் 15.20 லட்சம்
நெல்லை ராயல் கிங்ஸ்

சாய் கிஷோர் 13 லட்சம்
திருப்பூர் தமிழன்ஸ்

ஹரிஷ் குமார் 12.80 லட்சம்
சேப்பாக் சூப்பர் கில்லிஸ்

அருண் கார்த்திக் 12 லட்சம்
நெல்லை ராயல் கிங்ஸ்

சப்னில் சிங் 12 லட்சம்
மதுரை பாந்தர்ஸ்

விஜய் சங்கர் 10.25 லட்சம்
திருப்பூர் தமிழன்ஸ்

வாஷிங்டன் சுந்தர் 6.75 லட்சம் மதுரை பாந்தர்ஸ்

டீ நடராஜன் 6.25 லட்சம் திருச்சி ரூபி வாரியர்ஸ்.