டிஎன்பிஎல் 2025 சீசன் இன்று முதல் தொடக்கம்.. கோவை, திண்டுக்கல் அணிகள் மோதல்.. எந்த சேனலில் பார்க்கலாம்?

0
19

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் ஒன்பதாவது சீசன் இன்று முதல் தொடங்கி வரும் ஜூலை 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் கோவை கிங்ஸ் அணியும் நடப்பு சாம்பியன் ஆன திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் கோவையில் பலப்பரீட்சை நடத்துகிறது.

கோவை, திண்டுக்கல், சேலம், நெல்லை ஆகிய நான்கு ஊர்களில் இந்த தொடர் நடைபெறுகிறது. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு ஆட்டத்தில் மோதும். இதில் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களில் பிடிக்கும் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

- Advertisement -

எந்த அணியில் எந்த வீரர்கள்:

இந்தத் தொடர் பல ஸ்டார் வீரர்களை ஐபிஎல் அணிக்கு அனுப்பி வைத்திருக்கிறது. நடராஜன்,சாய் சுதர்சன், வருண் சக்கரவர்த்தி,சாய் கிஷோர், முருகன் அஸ்வின், ஷாருக்கான், வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்களை டிஎன்பிஎல் தொடர் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதனால் ஒன்பதாவது சீசனிலும் பல புதிய வீரர்கள் தங்களது திறமையை நிரூபிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியில் ஆல் ரவுண்டர் விஜய் சங்கரும், அஸ்வின் சித்தார்த்,ஷாருக்கான் ஆகியோர் கோவை கிங்ஸ் அணிக்கும், நடராஜன், சாய் கிஷோர் ஆகியோர் திருப்பூர் தமிழன் அணிக்கும், அஸ்வின், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியிலும் விளையாடுகிறார்கள். கடந்த சீசனில் இறுதிப்போட்டியில் விளையாடிய திண்டுக்கல், கோவை அணிகள் தற்போது மீண்டும் முதல் லீக் ஆட்டத்தில் பல பரிட்சை நடத்துகிறது. இரு அணிகளும் இதுவரை தலா பத்து முறை மோதி இருக்கிறார்கள்.

- Advertisement -

எந்த சேனல், ஒடிடியில் பார்க்கலாம்:

இதில் திண்டுக்கல் அணி ஆறுமுறையும், கோவை அணி நான்கு முறையும் வெற்றியை பெற்று இருக்கிறது. இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 50 லட்சம் ரூபாயும், இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு 30 லட்சம் ரூபாயும் பரிசாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த போட்டிகள் இரவு 7:15 மணிக்கு தொடங்கும். மதியம் நடைபெறும் போட்டி 3 15 மணிக்கு தொடங்கும்.

இதையும் படிங்க: இந்தியா முதல் டெஸ்ட்.. இங்கிலாந்து அணி அறிவிப்பு.. முக்கிய வீரர்கள் கூண்டோடு விலகல்.. ஆர்சிபி சிஎஸ்கே வீரர்கள் சேர்ப்பு

இந்த போட்டிகள் அனைத்தும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 தொலைக்காட்சிகளில் பார்க்கலாம். ஆன்லைனில் Fancode கஆப் மற்றும் இணையதளத்தில் பார்க்க முடியும்.இந்த தொடரை அதிகபட்சமாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் நான்கு முறை கைப்பற்றி இருக்கிறது. கோவை கிங்ஸ், தூத்துக்குடி, மதுரை திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது.

- Advertisement -