இந்தியா முதல் டெஸ்ட்.. இங்கிலாந்து அணி அறிவிப்பு.. முக்கிய வீரர்கள் கூண்டோடு விலகல்.. ஆர்சிபி சிஎஸ்கே வீரர்கள் சேர்ப்பு

0
121
England

இந்திய அணிக்கு எதிராக லீட்ஸ் மைதானத்தில் இருபதாம் தேதி துவங்க இருக்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸ் தலைமையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இந்த மாதம் ஜூன் 20ஆம் தேதி இங்கிலாந்து லீட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. தற்போது இந்த ஒரு போட்டிக்கு மட்டுமான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

ஆர்சிபி – சிஎஸ்கே வீரர்கள்

அறிவிக்கப்பட்டுள்ள இந்த டெஸ்ட் அணியில் ஆர்சிபி அணிக்காக விளையாடி கவனம் ஈர்த்த இளம் வீரர் ஜேக்கப் பெத்தேல் இடம்பெற்று இருக்கிறார். மேலும் சிஎஸ்கே அணிக்காக சில போட்டிகளில் விளையாடிய வேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் ஜேமி ஓவர்டன் இடம் பெற்றுள்ளார்.

இதைத் தாண்டி வழக்கமான இங்கிலாந்து டெஸ்ட் நட்சத்திர வீரர்கள் ஜாக் கிரவுலி, பென் டக்கெட், ஒல்லி போப் ஜோ ரூட், ஹாரி புரூக் மற்றும் பென் ஸ்டோக்ஸ், ஜெமி ஸ்மித் ஆகிய வீரர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள். இத்துடன் இன்னொரு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் கிரீஸ் வோக்ஸ் மீண்டும் திரும்ப வந்திருக்கிறார். மேலும் இந்த அணியில் ஒரே ஒரு சுழல் பந்துவீச்சாளராக சோயப் பஷீர் மட்டுமே இருக்கிறார்.

- Advertisement -

முக்கிய வீரர்கள் விலகல்

இந்த முதல் போட்டிக்கு இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு யூனிட் மொத்தமாக விலகி இருக்கிறது என்று கூறலாம். ஏனென்றால் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர்கள் ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் வுட் மற்றும் கஸ் அட்கின்சன் என மூவருமே காயத்தின் காரணமாக இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்திய அணிக்கு நல்ல வெற்றி வாய்ப்பை உருவாக்குகிறது.

தற்போது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சு யூனிட்டில் பிரைடன் கார்ஸ், சாம் குக், ஜோஸ் டாங் மற்றும் கிரீஸ் வோக்ஸ் ஆகியோர் இடம் பெற்று இருக்கிறார்கள். இந்த வகையில் பார்க்கும் பொழுது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு சற்று தரம் வாய்ந்ததாக இருக்கிறது.

இதையும் படிங்க : ஆர்சிபி-க்கும் எங்களுக்கும் சம்பந்தம் கிடையாது.. வெளியே நடந்ததை உடனே உள்ளே சொன்னோம் – பிசிசிஐ கை விரிப்பு

இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ் (கே) பென் டக்கெட், சாக் கிராலி, ஒல்லி போப், ஜேக்கப் பெத்தேல், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித், ஜேமி ஓவர்டன், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டாங், சாம் குக் மற்றும் சோயப் பஷீர்.

- Advertisement -