வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் களமிறங்க காத்திருக்கும் தமிழக சூப்பர் ஸ்டார்கள்

0
668
TN players in Ind vs Wi Series 2021

இந்திய அணி தற்போது மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு தயாராகி வருகிறது. தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி எளிதாக வெற்றி பெறும் என்று பலரும் நினைத்து இருந்த நிலையில் ஒரு போட்டியில் கூட இந்திய அணி வெல்லாமல் ஒயிட்வாஷ் ஆனது. இதன் காரணமாக அந்த தொடர் கேப்டனாக இருந்த கேஎல் ராகுலின் கேப்டன் பொறுப்பு குறித்து அதிகமாக விமர்சனங்கள் எழுந்தன. தற்போது ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக ரோகித் பதவி ஏற்க உள்ளதால் இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நிலையில் ரோகித் உள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் 3 ஒருநாள் போட்டிகள் உள்ளன. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு பயிற்சி பெறும் வண்ணமாக 3 டி20 போட்டிகளும் உள்ளன. வரும் பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை டி20 20 நடக்க இருக்கிறது. இந்த தொடருக்கான அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த அணியில் 2 தமிழக வீரர்கள் இந்திய வீரர்களுக்கு பயிற்சியில் உதவி செய்யும் விதமாக இணைக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் சாய் கிஷோர் மற்றும் அதிரடி ஆட்டக்காரர் சாருக்கான் புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 அல்லது 3 ஆண்டுகளாக தமிழக அணி பெற்றுவரும் வெற்றிகளில் இந்த இருவரும் அதிக பங்காற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடந்து முடிந்த சையது முஷ்டாக் அலி தொடரின் இறுதிப்போட்டியில் இருவரும் இணைந்து சிறப்பாக செயல்பட்ட கர்நாடக அணியை வீழ்த்தி தமிழக அணி கோப்பையை பெற்று தந்தனர்.

இறுதிப்போட்டியில் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளை வீழ்த்த ஷாருக்கான் 16 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றி தேடித்தந்த ஷாருக்கானை சமூகவலைதளங்களில் பெரிதும் புகழ்ந்து வந்தனர் ரசிகர்கள். சாய் கிஷோர் இந்த ஆண்டு நடந்த சையது முஷ்டக் அலி தொடரில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடருக்கான இடமிருந்து இருப்பதால் இந்த முறை இரண்டு இடங்களுமே அதிக தொகைக்கு அணிகளால் எடுக்கப்படுவர் என்று ரசிகர்கள் அதிக நம்பிக்கை வைத்திருக்கின்றனர். கடந்த முறையே ஏலத்தில் 5 கோடிக்கும் அதிகமாக சென்ற சாருக்கான் இந்த முறையும் அதை விட அதிகமான விலைக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -