2022 ஐ.பி.எல் ஏலத்தில் ஷாருக் கானின் அடிப்படை விலை உயர்வு ; மேற்கிந்திய வீரர் ஸ்மித்தின் விலை குறைப்பு – புதிய அறிவிப்பு

0
1244
Odean Smith and Sharuk Khan

இந்த ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் அடுத்த மாதம் 12 மற்றும் 13 ஆம் தேதி அன்று பெங்களூருவில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. 370 இந்திய வீரர்கள் மற்றும் 220 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தமாக 590 வீரர்கள் தங்களுடைய பெயர்களை ஏலத்தில் இணைத்துள்ளனர். நம் தமிழகத்தைச் சேர்ந்த 29 வீரர்கள் இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் தங்களது பெயரை இணைத்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய அடிப்படை விலையை குறைத்துள்ள மேற்கிந்திய தீவு வீரர்

- Advertisement -

25 வயதான ஒடியான் ஃபேபியன் ஸ்மித் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 2018 முதல் விளையாடி வருகிறார். ஆல்ரவுண்டர் வீரரான இவர் இதுவரை 33 டி20 போட்டிகளில் விளையாடி 36 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். டி20 போட்டிகளில் பொருத்தவரையில் இவருடைய பௌலிங் ஆவெரேஜ் 24.69 மற்றும் எக்காணமி 8.94 ஆகும். T20 போட்டிகளில் இவருடைய பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் 130.61 ஆகும்.

ஆரம்பத்தில் தன்னுடைய பெயரை அடிப்படை விலையான 2 கோடி ரூபாய் வீரர்கள் பட்டியலில் இவர் இணைத்திருந்தார். அதிலிருந்து சற்று கீழே இறங்கி ஒரு கோடி ரூபாய் அடிப்படை விலையை கொண்ட வீரர்கள் பட்டியலில் தன்னுடைய பெயரை ஒடியான் ஃபேபியன் ஸ்மித் தற்பொழுது மாற்றி இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தன் அடிப்படை விலையை உயர்த்திய தமிழக ஆல்ரவுண்டர் ஷாருக்கான்

நம் தமிழகத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் வீரரான ஷாருக்கான் கடந்த ஆண்டு பஞ்சாப் அணியில் பட்டையை கிளப்பியதை அவ்வளவு எளிதில் நாம் மறந்துவிட முடியாது. அதேபோல சமீபத்தில் தமிழக அணிக்காக சையது முஷ்டாக் அழி டிராபி தொடர் மற்றும் விஜய் ஹசாரே டிராபி தொடரிலும் தனது அதிரடியை காண்பித்து எதிர் அணி பந்து வீச்சாளர்களை கிறங்கடித்தார்.

- Advertisement -

இதுவரை 50 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மொத்தமாக 542 ரன்கள் டி20 போட்டிகளில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 136.40 என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது பந்து வீசும் அவர் இதுவரை 6 போட்டிகளில் பந்து வீசி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒரு ஆண்டில் அதிரடியான பார்மில் இருக்கும் அவர் நிச்சயமாக மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போக அதிக வாய்ப்பு உள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றாற் போலவே அவரும் தன்னுடைய அடிப்படை விலையை 20 லட்ச ரூபாயிலிருந்து 40 லட்ச ரூபாய்க்கு உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இறுதியில் ஷாருக்கான் எந்த தொகைக்கு ஏலம் போகப் போகிறார் என்பதை அடுத்த மாதம் நாம் பார்ப்போம்.