ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் தலைமை பயிற்சிளர் ஜஸ்டின் லாங்கருக்கும் ஆஸ்திரேலியா அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் டிம் பெயின் கூறியிருக்கிறார்.
தற்போது உலக கிரிக்கெட்டில் மூன்று வடிவங்களிலும் அதிரடியாக ஆதிக்கம் செலுத்தும் பேட்ஸ்மேனாக டிராவிஸ் ஹெட் உருவாகி இருக்கிறார். தனி ஒரு வீரராக ஆட்டத்தை எதிரணியின் கைகளில் இருந்து எடுத்துச் செல்லும் ஆற்றல் அவரது பேட்டிங்கில் இருக்கிறது. ஆனால் இதற்கு ஆரம்பத்தில் பணி நிர்வாகத்தில் ஆதரவு இல்லை என்று தெரிய வருகிறது.
ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் சிக்கலான காலகட்டம்
2018 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பந்தை சேதப்படுத்தியதற்காக கேப்டன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் ஒரு வருடம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டார்கள். இந்த நேரத்தில் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டை சுற்றிலும் நிறைய எதிர்மறையான விஷயங்கள் சென்று கொண்டிருந்தது.
இப்படியான நேரத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஜஸ்டின் லாங்கர் புதிய தலைமை பயிற்சியாளராக கொண்டுவரப்பட்டார். அவர் கொஞ்சம் கொஞ்சமாக அணியை ஒன்றிணைத்து மீட்டு இறுதியாக 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை பயிற்சியாளராக இருந்து வென்றார். ஆனாலும் அணியினருக்கும் அவருக்கும் சரியான அளவில் ஒற்றுமை இல்லை என்பது பின் நாட்களில் தெரியவந்தது.
லாங்கர் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்
இதுகுறித்து பேசி இருக்கும் டிம் பெயின் கூறும்பொழுது ” நான் இதை சொன்னால் இருவருமே இதை பொருட்படுத்த மாட்டார்கள் என்று நான் நினைக்கவில்லை. இருந்தாலுமே நான் சொல்கிறேன். ஹெட் மற்றும் முன்னாள் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் இருவருக்குமே கருத்து வேறுபாடு ஒரு விஷயத்தில் இருந்ததாக நான் நினைக்கிறேன்”
“ஜஸ்டின் லாங்கர் ஹெட் தற்காப்பு ஆட்டத்தை சீர்படுத்த வேண்டும் என்று கவனம் செலுத்த முயன்றார். ஆனால் ஹெட் தன் விருப்பப்படி அதிரடியாக விளையாடுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். அதன் மூலமாக அணியில் தன்னை நிரூபிப்பது மற்றும் எல்லோரையும் மகிழ்ச்சி படுத்துவது அவருடைய நோக்கமாக இருந்தது”
இதையும் படிங்க : பும்ராவை விட ஷமிதான் சிறந்த பவுலர்.. சிராஜ் பக்கத்தில் கூட இல்லை – லெஜெண்ட் ஆன்டி ராபர்ட்ஸ் பேச்சு
“சில நேரங்களில் அவர் சீக்கிரத்தில் ஆட்டம் இழந்து விடுவார், பெரிய ரன்கள் வராது. ஆனால் அவர் மிகவும் ஆக்ரோஷமாக இருப்பார். மேலும் ஒரு மேட்ச் வின்னர் ஆக இருக்கப் போகிறார். இந்த நேரத்தில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் அவர் சிறந்த வீரராக மலர்வதை நாம் பார்க்கிறோம். அவர் விளையாடும் விதத்தில் அவருக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.இந்த நேரத்தில் ஒரு வீரர் தன்னுடைய சக்தியின் உச்சத்தில் இருப்பதை பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.