ஆஸ்திரேலிய வீரர்களே ஜெயிக்கலாம்னு சந்தோசப்படாதீங்க.. களத்துல கிங் கோலி இருக்கவரைக்கும் உங்க வெற்றி டவுட் தான் – எச்சரித்த முன்னாள் ஆஸ்திரேலிய பயிற்சியாளர்!

0
7565

விராட் கோலி விக்கெட் எடுக்கும்வரை உங்கள் வெற்றி டவுட் தான் என எச்சரித்துள்ளார் ஜஸ்டின் லாங்கர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 469 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 173 ரன்கள் பின்தங்கியிருந்தது.

- Advertisement -

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 270 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது. பின்னர் டிக்ளர் செய்தது. இறுதியாக இந்திய அணியை விட 443 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

444 ரன்கள் இலக்கை துரத்தியபோது, கில் 18 ரன்கள், ரோகித் சர்மா 43 ரன்கள் மற்றும் புஜாரா 27 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேற 93 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. அடுத்ததாக விராட் கோலி மற்றும் ரஹானே பார்ட்னர்ஷிப் அமைத்து 71 ரன்கள் சேர்த்தனர். 4ஆம் நாள் முடிவில் 164/3 என உள்ளது. இந்திய அணி வெற்றிபெற இன்னும் 280 ரன்கள் இருக்கிறது.

ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற 7 விக்கெட்டுகள் எடுக்க வேண்டியதாக இருக்கிறது என்பதால் ஆஸ்திரேலிய தரப்பினர் வெற்றிபெற முடியும் என நினைக்கின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர்களை எச்சரித்து அறிவுரை கூறியுள்ளார் முன்னாள் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்.

- Advertisement -

“ஆஸ்திரேலியா அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தாலும், சந்தோஷப்பட வேண்டாம். களத்தில் இன்னும் விராட் கோலி இருக்கிறார். சேசிங்கில் அவர் எப்படிப்பட்ட டேஞ்சரானவர் என்பதை அனைவரும் அறிவோம். ஆகையால் அவரது விக்கெட்டை எடுக்கும் வரை உங்களது வெற்றி இன்னும் உறுதியாகவில்லை. நாளை உங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய டாஸ்க் விராட் கோலியின் விக்கெட்டை எடுப்பது தான். அவர் இருக்கும்வரை எப்படிப்பட்ட ஸ்கொர் பாதுகாப்பு இல்லை.” என்று எச்சரித்துள்ளார்.