திலக் வர்மா மட்டும் இல்ல இந்த பையனும் வேணும்.. எங்க டீம் செட்டில் இல்லைனு யார் சொன்னா? – கங்குலி அறிவித்த மாஸ் டீம்!

0
1069
Ganguly

இந்திய அணி தற்பொழுது பும்ரா தலைமையில் அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி தற்பொழுது நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரை முடித்துக் கொண்டு இந்திய அணி அக்டோபர் 30ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் துவங்கும் ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்க இருக்கிறது. இதற்கு அடுத்து இந்திய அணி உள்நாட்டில் மூன்று போர்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் உலகக் கோப்பை முன்பாக ஆஸ்திரேலியா அணியுடன் மோதுகிறது.

- Advertisement -

உலகக் கோப்பைக்கு அறிவிக்கப்படும் இந்திய அணிக்கு ஒத்திகை பார்ப்பதாக ஆசியக் கோப்பைக்கு அறிவிக்கப்படும் இந்திய அணி இருக்கிறது. ஆசியக் கோப்பைக்கான அணி அறிவிப்பு 21 ஆம் தேதி வெளிவரலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய அணி எவ்வாறு அமையும்? மேலும் இந்திய அணியின் பேட்டிங் யூனிட்டில் நம்பர் நான்காம் இடத்தில் யாருக்கு வாய்ப்பு தரப்படும்? கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவருமே உடல் தகுதி பெற்று விட்டார்களா? என்று பல கேள்விகள் முன்னேறுகிறது.

இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான இந்திய அணி பற்றி பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி “எங்களிடம் நம்பர் 4 பேட்ஸ்மேன் இல்லை என்று யார் சொன்னது? அந்த இடத்தில் பேட் செய்யக்கூடிய பல பேட்ஸ்மேன் எங்களிடத்தில் இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் எனது மனநிலை வேறானது. திலக் வர்மாவை அந்த இடத்திற்கு நான் பார்க்கிறேன்.

- Advertisement -

திலக் சிறந்த இளம் வீரர். அதிக அனுபவம் இல்லை ஆனால் அது ஒரு பொருட்டு கிடையாது. மேலும் நான் டாப் ஆர்டரின் மேலே ஒரு இடது கை ஆட்டக்காரரான ஜெய்ஸ்வாலை பார்க்க விரும்புகிறேன். அவருக்கு திறமை உள்ளது. குறிப்பாக அவர் அச்சம் அற்றவர். இது மிகச் சிறந்த ஒரு அணி.

ஜெய்ஸ்வால், இஷான் கிஷான் மற்றும் திலக் வர்மா போன்ற அற்புதமான வீரர்களை உள்ளடக்கிய ஒரு அணியை தேர்வாளர்கள் கண்டுபிடிக்க வேண்டும். இதிலிருந்து ஒரு சிறந்த ப்ளேயிங் லெவலை உருவாக்க வேண்டும்.

பும்ரா பற்றி நான் என்சிஏ-வில் உள்ளவர்களிடம் பேசினேன். அவர் சிறந்த நிலையில் இருப்பதாக கூறினார்கள். மறுநாள் பும்ரா மணிக்கு 90 மைல் வேகத்தில் பந்து வீசியதாக செய்து வந்தது. இதை இந்திய கிரிக்கெட்டுக்கு மிக நல்ல விஷயம்.

பந்துவீச்சை பொறுத்தவரை எடுத்துக் கொண்டால் பும்ரா, சமி, சிராஜ் மற்றும் குல்தீப் என அற்புதமான வீரர்கள் இருக்கிறார்கள். இவர்களிடம் மகத்தான திறமை உள்ளது. இப்படிப்பட்ட ஒரு அணியை எப்படி செட்டில் ஆகாத அணி என்று சொல்கிறார்கள்?

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் புதிய வீரர்கள் விளையாடினார்கள். உலகக் கோப்பைக்கு என அவர்கள் ஒரு அணியை தேர்ந்தெடுக்கும் பொழுது அந்த அணி மிகச் சிறப்பானதாக இருக்கும். அதை நீங்கள் பார்ப்பீர்கள். மற்றதெல்லாம் அந்த நாளில் நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதை பொறுத்தது!” என்று கூறி இருக்கிறார்!