திலக் வர்மா மும்பை இந்தியன்ஸ் அதனால் இந்திய அணியில் இடமா? மற்றவர்களுக்கு இடம் இல்லையா? – செலக்சன் குறித்து ரோகித் சர்மா பதில்!

0
979
Rohit

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி ரோகித் சர்மா தலைமையில் ஆசிய கோப்பை அதற்கு அடுத்து இந்தியாவில் நடக்க இருக்கும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை சந்திக்க வேகமாக தயாராகி வருகிறது!

நடக்க இருக்கும் உலகக் கோப்பைக்கு முன்னோட்டமான அணியாக ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட 17பேர் கொண்ட இந்த அணியில் இருந்தே உலகக் கோப்பைக்கான வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட அதிகபட்ச வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது.

- Advertisement -

அறிவிக்கப்பட்ட இந்த அணியில் ரவீந்திர ஜடேஜா இடது கை சுழற் பந்துவீச்சாளராக இருக்க, அக்சர் படேலும் தொடர்ந்தார். ஆப் ஸ்பின்னர் தேர்வு செய்யப்படவில்லை. மேலும் சூரிய குமாருக்கு வாய்ப்பு தரப்பட்டு சஞ்சு சாம்சன் வெளியில் வைக்கப்பட்டார். இதுவரை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி விளையாடாத திலக் வர்மா உள்ளே கொண்டுவரப்பட்டார்.

இந்த விஷயங்கள் எல்லாம் இந்திய அணி தேர்வு குறித்து நிறைய விவாதங்களை உண்டாக்கி இருந்தது. இது சம்பந்தமாக ரசிகர்கள் முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்தார்கள்.

நேற்று பேசிய ரோஹித் சர்மா பல முக்கிய விஷயங்களை தொட்டு அது சம்பந்தமாக கருத்துக்களை கூறினார். இந்த உலகக் கோப்பை தொடரை எப்படித்தான் அணுகுகிறேன் என்று பேசியிருந்தார். அதேபோல் அணி தேர்வு எப்படி நடக்கிறது என்பது குறித்தும் பேசியிருந்தார்.

- Advertisement -

அணி தேர்வு பற்றி பேசி இருந்த ரோஹித் சர்மா பல விஷயங்களை மனதில் கொண்டே அணி அமைக்கப்படுகிறது, அதில் தனிப்பட்ட காரணங்கள் எதுவும் இருப்பதில்லை என்பதை விளக்கி இருந்தார். தற்போதைய அணியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் திலக் வர்மாவுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் மும்பை இந்தியன்ஸ் என்பதற்காக இடம் கொடுக்கப்பட்டதா? என்கின்ற பேச்சும் சமூக வலைதளத்தில் உண்டு. தற்பொழுது இதற்கெல்லாம் சேர்த்து அணி எப்படி உருவாக்கப்படுகிறது என்று ரோஹித் சர்மா கூறியிருக்கிறார்.

இதுகுறித்து ரோகித் சர்மா கூறும் பொழுது ” தனிப்பட்ட விருப்பங்களால் கேப்டன் பதவி என்பது பாதிக்கப்படுவதில்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது ஒருவரை பிடிக்காமல் அவரை அணியில் சேர்க்காமல் இருப்பது கிடையாது. ஒவ்வொரு முடிவிற்கு பின்னாலும் ஒரு காரணம் இருக்கும். யாரையாவது சேர்க்கவில்லை என்றால் சரியான விளக்கம் இருக்கும்.

சில சமயங்களில் சூழ்நிலைகள்தான் இதற்கு வழிவகுக்கிறது. இது துரதிஷ்டவசமான விலக்கு. இந்த மாதிரியான நேரங்களில் எங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளன!” என்று விளக்கம் அளித்து பேசி இருக்கிறார்!