ரிஷப் பண்ட் சாதனையை உடைத்த திலக் வர்மா.. தொடரும் அசத்தல் பேட்டிங்.. அடுத்த யுவராஜ் சிங் கிடைச்சாச்சு!

0
378
Tilakvarma

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் விளையாடி வருகிறது!

இந்தத் தொடரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி கடைசி நேரத்தில் விக்கெட்டுகளை வேகமாக எழுந்து, வெல்ல வேண்டிய போட்டியில் இறுதியில் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

- Advertisement -

இதையடுத்து இந்திய அணி நிர்வாகத்தின் திட்டங்கள் மீது பலமான விமர்சனங்கள் எழுந்த நிலையில் இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளர்கள் குல்தீப் யாதவ் ஒரு சிறிய காயத்தால் அணியில் இடம் பெறவில்லை. இவருக்கு பதிலாக ரவி பிஷ்னோய் இடம் பெற்றார்.

இந்தப் போட்டிக்கான டாசில் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு வழக்கம் போல துவக்க ஆட்டக்காரர்கள் தடுமாற ஆரம்பித்தார்கள். கில் ஒன்பது பந்துகளில் 7 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த சூரியகுமார் யாதவ் பரிதாபமாக ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

தடுமாறிக் கொண்டிருந்த இசான் கிஷான் 23 பந்தில் 27 ரன்கள் எடுத்து வெளியேறினார். இரண்டாவது வாய்ப்பைப் பெற்ற சஞ்சு சாம்சன் தேவையில்லாத ஷார்ட் விளையாடி 7 பந்துகளில் ஏழு ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இப்படி விக்கட்டுகள் ஒருபுறம் விழுந்து கொண்டு இருந்தாலும் இளம் வீரர் திலக் வர்மா ஆட்டத்தை காட்டினார். இந்த போட்டியிலும் அவரது பேட்டிங் திறமை மற்றும் புத்திசாலித்தனம் இரண்டும் வெளிப்பட்டது. மிகப் பொறுப்பாக விளையாடிய அவர் 41 பந்துகளில் ஐந்து பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

தற்பொழுது இந்த அரை சதத்தின் மூலம் இந்திய அணிக்காக குறைந்த வயதில் அரை சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சிறப்பைப் பெற்றார். தற்பொழுது இவருக்கு 20 வயதாகிறது. இவருக்கு முன்னால் இதே வயதில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான டி20 உலக கோப்பையை வென்ற தொடரில், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ரோஹித் சர்மா அரை சதம் அடித்தது சாதனையாக இருக்கிறது. மூன்றாவது இடத்தில் ரிஷப் பண்ட் இருக்கிறார்.

ஹர்திக் பாண்டியா 24, அக்சர் படேல் 14, ரவி பிஷ்னோய் 8, அர்ஸ்தீப் சிங் 6 ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்திருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அகேல் ஹுசைன் மற்றும் அல்சாரி ஜோசப் இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக குறைந்த வயதில் அரை சதம் அடித்த வீரர்கள்.

ரோகித் சர்மா 20 வயது 143 நாட்கள்
திலக் வர்மா 20 வயது 271 நாட்கள்
ரிஷப் பண்ட் 21 வயது 38 நாட்கள்