இந்திய கிரிக்கெட்

239 பந்து.. இங்கிலாந்தில் திலக் வர்மா மேஜிக் சதம்.. நான் டி20 பிளேயர் மட்டும் கிடையாது.. அதிரடி அறிவிப்பு

இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் திலக் வர்மா இங்கிலாந்து உள்நாட்டு டெஸ்ட் தொடரான கவுன்டி கிரிக்கெட்டில் அறிமுக போட்டியில் அசத்தல் சதம் அடித்து அசத்தியிருக்கிறார்.

- Advertisement -

தற்போது இந்திய கிரிக்கெட்டில் திலக் வர்மா டி-20 அணியில் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு வருகிறார். ஆரம்பத்தில் 2023 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை தொடரின் போது ஒருநாள் கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு இறுதியாக கடந்த ஆண்டு இந்திய டி-20 அணியில் வாய்ப்பு பெற்று விளையாடி வருகிறார்.

கவுன்டி கிரிக்கெட்டில் அறிமுகம்

இந்த நிலையில் இந்திய சிவப்புப் பந்து அணியில் இடம்பெற வேண்டும் என்றால் ரஞ்சி தொடரில் மற்றும் விளையாடாமல் இங்கிலாந்து கவுன்டி டெஸ்ட் தொடரிலும் விளையாட வேண்டியது முக்கியம் என இந்திய இளம் வீரர்கள் உணர்ந்து இருக்கிறார்கள். இதன் காரணமாக இந்தியாவில் இருந்து சில முக்கிய நட்சத்திர இளம் வீரர்கள் கவுன்டி கிரிக்கெட் விளையாட இங்கிலாந்து சென்று இருக்கிறார்கள்.

தற்போது திலக் வர்மா ஹாம்சையர் அணிக்காக எஸக்ஸ் அணிக்கு எதிராக முதல்முறையாக இங்கிலாந்து 20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். இந்த போட்டியில் பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலை காணப்பட்டது. பேட்டிங் செய்வதற்கு மிகக் கடினமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அணியை மீட்டு அசத்தல் சதம்

இந்த சூழ்நிலையில் தனது அணி நெருக்கடியில் இருந்த பொழுது களம் இறங்கி மிகப் பொறுமையாக விளையாடி 239 பந்துகளை சந்தித்து திலக் வர்மா தனது அறிமுக கவுன்டி போட்டியில் சதம் அடித்திருக்கிறார். அவர் காட்டிய பொறுமை மற்றும் பேட்டிங் தொழில்நுட்பம் இந்திய அணி நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்திருக்கிறது.

இதையும் படிங்க : கோலி செஞ்ச அந்த வெறித்தனமான வேலையை.. இப்ப கில் செய்யணும்.. ஆனா 3 பேர் வேணும் – ரவி சாஸ்திரி அறிவுரை

இதுகுறித்து திலக் வர்மா பேசும் பொழுது ” நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறேன், எனக்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது தான் மிகவும் பிடிக்கும். நான் தற்போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கிறேன். இதனால் என்னை டி20 பேட்ஸ்மேன் என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் பேட்டை உடலுக்கு அருகில் வைத்து பொறுமையாக சவால் கொடுத்து விளையாடும் டெஸ்ட் கிரிக்கெட்தான் எனக்கு பிடிக்கும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by
Tags: Tilak Varma