தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் குறிப்பிட்ட ஒரு விஷயத்திற்காக விராட் கோலியை இந்திய அணி தவற விடுவதாலும், இதற்காக கேப்டன் கில் ஒரு முக்கியமான பொறுப்பை சரியான வீரரை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார்.
இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் இலக்கை நிர்ணயித்த போதும் கூட விக்கெட் இழப்பில்லாமல் தற்போது இங்கிலாந்து அணி 181 ரன் எடுத்து வலிமையான நிலையில் இருக்கிறது. தற்போது இந்திய வீரர்கள் இடையே களத்தில் தன்னம்பிக்கையான மனநிலை காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய பவுலர்கள் செய்யும் தவறு
தற்போது போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆடுகளம் இந்திய ஆடுகளத்தைப் போலவே இருக்கிறது. எனவே இங்கு பந்து ஸ்டெம்பை தாக்கும் விதமாக தொடர்ந்து ஒரே புள்ளியில் வீசிக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால் பிரசித்தி கிருஷ்ணா மற்றும் சர்துல் தாகூர் இருவரும் கட்டுப்பாடு இல்லாமல் வீச அது இந்திய அணிக்கு பிரச்சனை ஆகி இருக்கிறது.
மேலும் இங்கிலாந்து அணியின் வசம் ஆட்டம் இருக்கின்ற காரணத்தினால் இந்திய அணியினர் இடையே நல்ல உற்சாகம் காணப்படவில்லை. இந்த நிலையில் இப்படியான நேரத்தில் விராட் கோலியை இந்திய அணி தவற விடுவதாகவும், இதற்காக ஒரு சிறப்பு ஏற்பாட்டை கேப்டன் கில் செய்ய வேண்டுமென ரவி சாஸ்திரிக்கு ஒரு இருக்கிறார்.
மூன்று பேர் சேர்ந்து செய்ய வேண்டும்
இதுகுறித்து ரவி சாஸ்திரி பேசும்பொழுது ” இன்று இந்திய அணிக்கு மிக முக்கிய தேவையாக இருப்பது எதிர்ப்பை எதிர்கொள்ளக்கூடிய எதிரணியுடன் மோதக்கூடிய விராட் கோலிதான். விராட் கோலி செய்த இந்த வேலையை தற்போது இந்திய அணியில் யாராவது செய்ய வேண்டும். இந்த பொறுப்பை கேப்டன் கில் யாருக்காவது கொடுக்க வேண்டும். ஒருவரே செய்வது கடினமாக இருக்கலாம் எனவே மூன்று பேருக்கு இந்த பொறுப்பை கொடுத்து களத்தில் மோத வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க : ஒரு ஓவருக்கு 4 ரன்கள் அடித்தால் போதும்.. இந்தியாவுக்கு காத்திருக்கும் ஆபத்து.. உச்சக்கட்ட பரபரப்பு
இது குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் ஆதர்டன் கூறும் பொழுது “சிறிது நேரத்திற்கு முன்பு ரவி சாஸ்திரி சொன்ன மனநிலைதான் சிராஜ்க்கு இருக்கிறது. அவர் விராட் கோலி போல எதிரணியின் முகத்திற்கு நேரே நிற்கக் கூடியவர். இதை இங்கிலாந்து அணிக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஒரு போட்டியில் நரகத்தை கட்டவிழ்த்து விட வேண்டும் எனச் சொல்லி அதை இந்திய அணியை செய்து காட்ட வைத்தவர் விராட் கோலி. தற்பொழுது அப்படிப்பட்ட ஒரு வீரர் அணிக்குள் தேவை” என்று கூறி இருக்கிறார்.






