நேற்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் திலக் வர்மா ஆட்டம் இழக்காமல் 34 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் விராட் கோலியின் இரண்டு மெகா சாதனைகளை உடைத்திருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே இதை பயன்படுத்திக் கொண்டு இறுதிவரை நின்று விளையாட கில்லுக்கு கிடைத்த வாய்ப்பை அவர் வீணடித்தார். 28 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
அதேசமயத்தில் இன்று பேட்டிங் வரிசையில் மூன்றாவதாக வந்த திலக் வர்மா, இலக்கு குறைவாக இருந்த காரணத்தினாலும், மேலும் அவர் வரும்பொழுது பவர் பிளேவில் 50க்கும் மேற்பட்ட ரன்கள் எடுக்கப்பட்டு விட்டதாலும், பொறுமையாக விளையாடி இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
தனது விக்கெட்டை அவசரப்பட்டு விளையாடி கொடுக்காமல், இந்த போட்டியில் இருந்து நல்ல நம்பிக்கையை மேற்கொண்டு எடுத்திருக்கிறார். இதே வாய்ப்பு இந்திய அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டன் இருவருக்குமே கிடைத்த பொழுது, இருவருமே தவறான ஷாட் விளையாடி ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். ஆனால் திலக் வர்மா தேவையில்லாத சூழ்நிலையில், அவசரப்பட்டு விக்கெட் கொடுக்க செய்யவில்லை. இறுதி வரை நின்று ஆட்டத்தை முடித்தார்.
இந்த போட்டியில் அவர் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 34 பந்தில் 25 ரன்கள் எடுத்ததின் மூலமாக, ஒரு அணிக்கு எதிராக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ஆவரேஜ் வைத்துள்ள பேட்ஸ்மேன் ஆகவும், மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரன்னை துரத்தும் பொழுது அதிக ஆவரேஜ் வைத்துள்ள இந்திய பேட்ஸ்மேன் ஆகவும் சாதனை படைத்திருக்கிறார். இந்த இரண்டு சாதனைகளும் இதற்கு முன்பு விராட் கோலியிடம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
டி20 போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக இந்தியா எடுத்த அதிகபட்ச சராசரி:
(குறைந்தபட்சம் 500 ரன்கள்)
70.50 – திலக் வர்மா – தென்னாப்பிரிக்கா
70.28 – விராட் கோலி – பாகிஸ்தான்
67.80 – விராட் கோலி – இலங்கை
58.83 – கேஎல்.ராகுல் – வெஸ்ட் இண்டீஸ்
57.00 – விராட் கோலி – வெஸ்ட் இண்டீஸ்
இதையும் படிங்க : நாங்க தோத்துதான் போயிட்டோம்.. ஆனா இந்த பெரிய பாசிட்டிவான விஷயம் கிடைச்சத மறந்துடாதீங்க – மார்க்ரம் பேட்டி
டி201 சேஸிங்கில் சிறந்த பேட்டிங் சராசரி (குறைந்தபட்சம் 500 ரன்கள்)
68.0 – திலக் வர்மா
67.1 – விராட் கோலி
47.71 – தோனி
45.55 – ஜேபி டுமினி
44.93 – சங்கக்காரா