நேற்று மூன்றாவது டி20 போட்டியில் தோல்வி அடைந்தாலும் சில பாசிட்டிவான விஷயங்கள் கிடைத்திருப்பதாக தென் ஆப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம் கூறியிருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 117 ரன் மட்டுமே எடுத்தது. இதில் கேப்டன் எய்டன் மார்க்ரம் மட்டும் சிறப்பாக விளையாடி 46 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். அடுத்து அபிஷேக் ஷர்மா 18 பந்தில் 35 ரன் எடுத்து அதிரடி துவக்கம் தந்தாலும், இந்திய அணி மேற்கொண்டு பொறுமையாகவே விளையாடி 15.3 ஓவரில்தான் வெற்றி பெற்றது.
இதைத்தான் செய்திருக்க வேண்டும்
இந்த போட்டி குறித்து எய்டன் மார்க்ரம் பேசும் பொழுது ” இந்த மாதிரியான ஆடுகளத்தில் எல்லா பவுலர்களையும் அடித்து விளையாட முடியாது. நமக்கு அடித்து விளையாட வசதியாக இருக்கும் பவுலர் வரும் வரை பொறுமையாக இருக்க வேண்டும். மற்ற நேரத்தில் சிங்கள் டபுள் எடுத்து ஸ்கோர் போர்டு நகரும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். இப்படி விளையாடினால் நமக்கு 140 முதல் 150 ரன்கள் கிடைக்கும்”
“அதே சமயத்தில் வீரர்களை பந்தை தரையோடு அடித்து விளையாட வேண்டும் என நாம் நெகட்டிவாக கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது. மாறாக வீரர்கள் நம்பிக்கையோடும் சுதந்திரத்தோடும் விளையாடும் படி நாம் ஊக்குவிக்க வேண்டும். இந்த போட்டியிலிருந்து வீரர்கள் நிச்சயம் ஏதாவது ஒன்றை கற்றுக் கொண்டிருப்பார்கள். இதனால் எதிர்காலத்தில் அவர்கள் நிச்சயம் நல்ல கிரிக்கெட் வீரர்களாக மாறுவார்கள்”
இந்த பாசிடிவ் கிடைத்தது
“பந்துவீச்சை பொறுத்த வரையில் ஆரம்ப ஓவர்கள் மிகவும் முக்கியமானது. எதிரணி இப்படி சிறப்பாக விளையாடும் என்பது தெரிந்த ஒரு விஷயம்தான். எனவே அவர்கள் சிறப்பாக விளையாடியதற்கு அவர்களுக்கு கிரெடிட் கொடுக்க வேண்டும். நாங்கள் முதல் மூன்று அல்லது நான்கு ஓவர்களில் சரியான லென்த்தில் பவுலிங் செய்யாதது ஒரு குறையாக அமைந்தது”
இதையும் படிங்க : துணை கேப்டன் கில்லை எப்படி நீக்குவீங்க.. அவருக்கு நியாயமா இதை செய்யாம டீமை விட்டு தூக்க முடியாது – அஸ்வின் பேட்டி
“இதற்கு பிறகு எங்கள் பவுலர்கள் புரிந்து கொண்டு சரியான லென்த்தில் தொடர்ந்து பந்து வீசினார்கள். பேட்ஸ்மேன்களுக்கு சந்தேகம் வரும்படி தொடர்ந்து செயல்பட்டார்கள். இதன் காரணமாகவே போட்டி நீண்டுக் கொண்டு சென்றது. இது எங்களுக்கு இந்த போட்டியில் கிடைத்த மிகவும் பாசிட்டிவான விஷயம்” என்று கூறியிருக்கிறார்.






