திக் திக் கடைசி ஓவர்; குட்டி மலிங்காவை தாண்டி சிஎஸ்கே வை வீழ்த்தியது பஞ்சாப்!

0
626
Ipl2023

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகளில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிக்கொண்டன!

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று மகேந்திர சிங் தோனி சென்னை அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். சென்னை அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் 86 ரன்கள் முதல் விக்கட்டுக்கு பாட்னர்ஷிப் தந்தார்கள்.

- Advertisement -

தொடர்ந்து விளையாடிய சென்னை அணிக்கு ருத்ராஜ் 37, சிவம் துபே 27, மொயின் அலி 10, ரவீந்திர ஜடேஜா 12, மகேந்திர சிங் தோனி 13 மற்றும் கான்வே 52 பந்துகளில் 16 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 92 ரன்கள் எடுக்க, 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு சென்னை அணி 200 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணிக்கு கேப்டன் ஷிகர் தவான் 28, பிரப்சிம்ரன் 42, அதர்வா 13, லிவிங்ஸ்டன் 40, சாம் கரன் 29, ஜிதேஷ் சர்மா 21 ரன்கள் எடுத்தார்கள்.

பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் கடைசி ஓவருக்கு பஞ்சாப் அணிக்கு ஒன்பது ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை குட்டி மலிங்கா பதிரனா வீசினார். அந்த ஓவரை எதிர் கொண்ட சிக்கந்தர் ராஸா முதல் பந்தில் ஒரு ரன் எடுக்க, அடுத்த பந்தில் ஷாருக்கான் ஒரு ரன் எடுத்தார். அடுத்த பந்தை தவறவிட்ட சிக்கந்தர் ராஸா அதற்கு அடுத்த பந்தில் இரண்டு ரன் எடுத்தார். நடுவில் ஒரு வைட் பந்து வீசப்பட்டது.

- Advertisement -

இரண்டு பந்துகள் மீதம் இருக்க பஞ்சாப் அணியின் வெற்றிக்கு ஐந்து ரன்கள் தேவைப்பட்டது. ஐந்தாவது பந்தில் சிக்கந்தர் ராஸா 2 ரன்கள் எடுத்தார். கடைசிப் பந்தில் மூன்று ரன்கள் தேவைப்பட்ட நிலையில் லாங் லெக் திசையில் பந்தை அடித்த அவர், அங்கு ஃபீல்டர் இல்லாத காரணத்தால் ஓடி மூன்று ரன்கள் எடுத்து, ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிற வைத்த இந்த போட்டியில் பஞ்சாப்பை வெல்ல வைத்தார்.

இரு அணிகளும் ஒன்பது போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில் இரண்டு அணிகளும் ஐந்து வெற்றிகளுடன் 10 புள்ளிகள் எடுத்துள்ளன. சென்னை அணி தொடர்ந்து நான்காவது இடத்திலும், பஞ்சாப் அணி ஐந்தாவது இடத்திற்கும் முன்னேறி உள்ளது.