திக் திக் நிமிடங்கள்.. 3 ரன்களுக்கு 4 விக்கெட்.. விறுவிறுப்பான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் இந்தியாவை வீழ்த்தியது!

0
569
Indvswi2023

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே தற்பொழுது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. இதன் முதல் போட்டியில் இந்திய அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இருந்தது!

இந்த நிலையில் இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியில் குல்தீப் யாதவ் இடம்பெறவில்லை. இவரது இடத்தில் ரவி பிஷ்னோய் இடம் பெற்றார். இந்திய அணி டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

- Advertisement -

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் கில் 6, இஷான் கிஷான் 27, சூரியகுமார் யாதவ் 1, சஞ்சு சாம்சன் 7, ஹர்திக் பாண்டியா 24, அக்சர் படேல் 14, ரவி பிஸ்னோய் 8, அர்ஸ்தீப் சிங் 6 ரன்கள் எடுத்தார்கள்.

இன்னொரு முனையில் இளம் வீரர் திலக் வர்மா ஆட்டத்தில் தன் பொறுப்பை உணர்ந்து மிகச் சிறப்பாக விளையாடி 41 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 51 ரன்கள் எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அல்சாரி ஜோசப் மற்றும் அகேல் உசைன் இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு முதல் பந்திலேயே பிரண்டன் கிங் விக்கெட், நான்காவது பந்திலே சார்லஸ் 2 விக்கெட் என இரண்டு விக்கெட் வீழ்த்தி டபுள் செக் வைத்தார் கேப்டன் ஹர்திக் பாண்டியா. இதற்கு இடையில் கையில் மேயர்ஸ் 15, கேப்டன் ரோமன் பவல் 21 ரன்களில் வெளியேறினார்கள்.

- Advertisement -

ஆனால் நான்காவது வீரராக களத்திற்கு வந்த நிக்கோலஸ் பூரன் ஒரு முனையில் நின்று எதைப்பற்றியும் கவலைப்படாமல் அதிரடியில் நொறுக்கி தள்ளிவிட்டார். மொத்தம் 40 பந்துகளை சந்தித்த அவர் ஆறு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 67 ரன்கள் எடுத்து முகேஷ் குமார் பந்தில் சஞ்சு சாம்சன் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

இந்த இடத்தில் இருந்து ஆட்டம் அப்படியே திரும்பி இந்தியா பக்கம் வந்தது. 126 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகள் இழந்திருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, அங்கிருந்து மேற்கொண்டு மூன்று ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகள் இழந்தது. சாகல் வீசிய பதினாறாவது ஓவரில் ஒரு ரன் அவுட் மற்றும் இரண்டு விக்கட்டுகள் என மொத்தம் மூன்று விக்கெட்டுகள் விழுந்தது.

இந்த நிலையில் கடைசி நான்கு ஓவர்களுக்கு 24 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அகேல் ஹுசைன் 16, அல்ஜாரி ஜோசப் 10 எடுத்து பரபரப்பான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வெற்றி பெற வைத்தார்கள். இந்திய தரப்பில் கேப்டன் ஹர்திக் பாண்டியா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த தொடரில் தற்பொழுது இரண்டுக்கு பூஜ்ஜியம் என வெஸ்ட் இண்டீஸ் முன்னிலை வகிக்கிறது!