லாஸ்ட் ஓவர் தொடர்ந்து மூணு சிக்ஸ்; ஐபிஎல் வரலாற்றில் வான்கடேவில் முதல் முறையாக 200 ரன்னை சேஸ் செய்து மும்பை சாதனை!

0
679
Ipl2023

ஐபிஎல் 16ஆவது சீசனில் இன்று மும்பை வான்கடை மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர்.

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. பட்லர் 18 ரன்களில் வெளியேறினாலும் மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் மிகச் சிறப்பாக விளையாடி 62 பந்துகளில் 16 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் உடன் 124 ரன்கள் குவித்து அட்டகாசப்படுத்தினார்.

- Advertisement -

மேலும் சஞ்சு சாம்சன் 14, படிக்கல் 2, ஜேசன் ஹோல்டர் 11, சிம்ரன் ஹெட்மையர் 8, துருவ் ஜுரல் 2, ரவிச்சந்திரன் அஸ்வின் 8* ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது.

மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணிக்கு ரோகித் சர்மா 3, கிசான் கிஷான் 28, கேமரூன் கிரின் 44, சூரியகுமார் யாதவ் 55 ரன்கள் எடுத்தனர்.

கடைசி இரண்டு ஓவர்களுக்கு 32 ரன்கள் தேவை என்ற நிலையில் களத்தில் டிம் டேவிட் மற்றும் திலக் வர்மா நின்றனர். ட்ரெண்ட் போல்ட் வீசிய 19 ஆவது ஓவரில் 15 ரன்கள் கிடைத்தது.

- Advertisement -

கடைசி ஓவருக்கு 17 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. அந்த ஓவரை ஹோல்டர் வீச தொடர்ந்து முதல் மூன்று பந்துகளில் டிம் டேவிட் அபாரமாக மூன்று சிக்ஸர்கள் அடித்து அணியை வெல்ல வைத்தார். டிம் டேவிட் 14 பந்துகளில் இரண்டு பவுண்டரி ஐந்து சிக்ஸர்கள் உடன் 45 ரன்களுடனும், திலக் வர்மா 21 பந்தில் 29 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

மும்பை அணி தரப்பில் அர்ஷத் கான் மூன்று ஓவர்கள் பந்து வீசி 39 ரன்கள் தந்து மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார். ராஜஸ்தான் தரப்பில் அஸ்வின் நான்கு ஓவர்கள் பந்து வீசி 27 ரன்கள் தந்து இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார். மும்பை அணிக்கு இது நான்காவது வெற்றியாகும்.