கம்பீர் தேர்வு செய்த உலக லெவன்.. 3 பாகிஸ்தான் வீரர்களுக்கு இடம்.. 2 அணி புறக்கணிப்பு

0
25
Gambhir

இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக சமீபத்தில் பொறுப்பேற்ற இந்திய முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தன்னுடைய உலக பிளேயிங் லெவனை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

கம்பீர் தேர்ந்தெடுத்து இருக்கும் இந்த உலக பிளேயிங் லெவன் என்பது இந்திய அணி இல்லாமல் மற்ற அணிகளில் இருந்து தேர்ந்தெடுப்பது ஆகும். இந்த வகையில் கம்பீர் யாரும் எதிர்பார்க்காத சில பெயர்களை தேர்ந்தெடுத்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

இரண்டு அணி வீரர்கள் புறக்கணிப்பு

கம்பீர் தேர்ந்தெடுத்திருக்கும் உலகத்திலேயே லெவெனில் நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணி வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை. குறிப்பாக கம்பீர் விளையாடிய காலத்தில் நியூசிலாந்தில் இருந்து ஷேன் பாண்ட் போன்ற சிறந்த வீரர்கள் இருந்திருக்கிறார்கள். இருந்தாலும் அவர் இந்த இரண்டு அணியில் இருந்து யாரையும் தேர்வு செய்யவில்லை.

இந்த உலக பிளேயிங் லெவனில் துவக்க ஆட்டக்காரர்களாக ஆஸ்திரேலியாவின் அபாயகரமான வெள்ளை பந்து துவக்க ஜோடி மேத்யூ ஹைடன் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் இருவரும் இருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஏபி டிவில்லியர்ஸ் வருகிறார். நான்காவது இடத்தில் கரீபியன் பிரையன் லாரா இடம் பெறுகிறார்.

- Advertisement -

முக்கியமான மூன்று பாகிஸ்தான் வீரர்கள்

இதைத்தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக், ஆறாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஆல் ரவுண்டர் ஆண்ட்ரூ சைமன்ஸ், ஏழாவது பாகிஸ்தானின் ஆல் ரவுண்டர் அப்துல் ரசாக் மற்றும் எட்டாவது இடத்தில் இங்கிலாந்தின் ஆல் ரவுண்டர் ஆகியோர் ஆண்ட்ரூ ப்ளின்ட்டாப் இடம் பெற்றிருக்கிறார்கள்.

மேலும் ஒரே ஒரு சுழல் பந்துவீச்சாளராக முத்தையா முரளிதரன் இடம் பெற்றிருக்கிறார். மேலும் இரண்டு பிரதான வேகப்பந்துவீச்சாளர்களுக்கான இடத்தில் பாகிஸ்தான் அணியின் சோயப் அக்தர் மற்றும் கம்பீரின் மிக விருப்பத்திற்குரிய வேகபந்துவீச்சாளர் தென் ஆப்பிரிக்காவின் மோர்னே மோர்கல் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.

இதையும் படிங்க : இங்கிலாந்து எதிரா ஜெயிக்க.. இதை கேட்டோம் தர மறுத்துட்டாங்க – இலங்கை அணி கேப்டன் குற்றச்சாட்டு

கம்பீர் தேர்ந்தெடுத்திருக்கும் உலக பிளேயிங் லெவன் :

ஆடம் கில்கிறிஸ்ட், மேத்யூ ஹைடன், ஏபி டி வில்லியர்ஸ், பிரையன் லாரா, இன்சமாம் உல் ஹக், ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், அப்துல் ரசாக், ஆண்ட்ரூ பிளின்டாஃப், முத்தையா முரளிதரன், சோயிப் அக்தர் மற்றும் மோர்னே மோர்கல்.

- Advertisement -