இலங்கை அணி இங்கிலாந்து சென்று மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்கு முன்னர் நடைபெற்ற இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் தோல்வியை தழுவி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முழு வீச்சில் தயாராகவில்லை என்றும், நாங்கள் வைத்த கோரிக்கைகள் தரப்படவில்லை என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் தனஞ்செயா டி சில்வா குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி இன்று நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னதாக ஆகஸ்ட் 14ஆம் தேதி நடைபெற்ற இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி தோல்வியை தழுவியது. இருப்பினும் இந்த தொடருக்காக இரண்டு அணி வீரர்களும் தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் டெஸ்ட் தொடருக்கு தயாராகும் விதமாக சில பயிற்சி போட்டிகளை கேட்டதாகவும் ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய தரப்பில் அதனை தர மறுத்து விட்டதாகவும் அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை எனவும் இலங்கை அணியின் கேப்டன் தனஞ்செயா குற்றச்சாட்டினை முன் வைத்திருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “ஆசிய நாடுகளின் சூழ்நிலைகள் இங்கிருக்கும் சூழ்நிலைகளைவிட முற்றிலும் வேறுபட்டவை. நாங்கள் மேலும் சில பயிற்சி போட்டிகளில் விளையாட விரும்பினோம். ஆனால் எங்களுக்கு ஒரே ஒரு பயிற்சி ஆட்டம் மட்டுமே கிடைத்தது. முதல் பயிற்சி ஆட்டத்திலும் நாங்கள் முழு பலத்துடன் சென்று விளையாடவில்லை. சில வீரர்களை நாங்கள் சோதனை முயற்சியில் டெஸ்ட் செய்து பார்த்தோம்.
ஆனால் அதற்கான ரிசல்ட் எங்கள் வழியில் கிடைக்கவில்லை. ஆனால் நாங்கள் தற்போது முழு வீச்சில் தயாராகி வருகிறோம். எனவே அது முதல் டெஸ்ட் போட்டியில் நன்றாக வேலை செய்யும் என்று நம்புகிறேன். பயிற்சி போட்டிகள் தராததற்கான காரணம் குறித்து எனக்கு தெரியவில்லை. மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடராக இது இருப்பதால் தொடரின் நீளம் கருதி பயிற்சி ஆட்டங்கள் தராதது ஒரு காரணமாக இருக்கலாம்” என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க:பதவி பணம் விராட் கோலிய மாத்திடுச்சா.. அமித் மிஸ்ரா விமர்சித்தது உண்மையா? – பியூஸ் சாவ்லா பதில்
இலங்கை அணி கடைசியாக 2016ம் ஆண்டு இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதற்குப் பிறகு தற்போது தான் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர் விளையாட உள்ளது. எனவே இந்த முறை நிச்சயம் இங்கிலாந்து மண்ணில் சாதனை படைக்கும் திட்டத்தோடு இலங்கை அணி களமிறங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.