ஜூன் 1 முதல் சர்வதேச கிரிக்கெட்டில் வரவிருக்கும் மூன்று முக்கிய விதிகள்; இனி எந்த குழப்பங்களுக்கும் இடம் இருக்காது!

0
604
ICC

கிரிக்கெட் விளையாட்டை மட்டும் எவ்வளவு வேண்டுமானாலும் நெகிழ்த்திக் கொண்டே போகலாம். நாள் கணக்கு முடிவில்லாமல் ஆரம்பித்த கிரிக்கெட், இன்று சர்வதேச அளவில் 20 ஓவர்களுக்கு வந்திருக்கிறது.

இதேபோல் கிரிக்கெட்டில் விதிகள் என்று எடுத்துக் கொண்டால் இருப்பதை மாற்ற வேண்டியதும், புதிதாகக் கொண்டு வர வேண்டியதும் என சிலபல விஷயங்கள் இன்னுமே பாக்கி இருக்கிறது.

- Advertisement -

இப்படி எல்லாம் ஏதாவது இருந்து கொண்டே இருப்பதால்தான் ஒரு குறிப்பிட்ட பகுதியிலாவது உலகில் நிறைய ரசிகர்களை தனக்காக வைத்திருக்கக் கூடிய ஒரு விளையாட்டாக கிரிக்கெட் இருக்கிறது.

ஜூன் ஒன்றாம் தேதி முதல் சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று விதிகள் நடைமுறைக்கு வர இருக்கின்றன. இதில் வீரர்களின் பாதுகாப்பும், தேவையற்ற குழப்பங்கள் இல்லாமையும் உறுதி செய்யப்படுகிறது.

முதல் விதி; கள நடுவர் ஆட்டம் இழந்ததில் சந்தேகம் இருக்கும் பொழுது, குறிப்பாக கேட்ச், இதற்கு மூன்றாவது நடுவரிடம் போகும் பொழுது, தன்னுடைய அபிப்ராயமாக அவுட் என்றோ, அவுட் இல்லை என்றோ சாஃப்ட் சிக்னல் தருவார்.

- Advertisement -

பின்பு மூன்றாவது நடுவர் கள நடுவர் கொடுத்த சாப்ட் சிக்னலை மறுப்பதற்கு வலுவான காரணம் இருக்கிறதா? என்று மட்டுமே பார்ப்பார். வீடியோவில் நடுவர் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக ஆதாரங்கள் சிக்கவில்லை என்றால், கள நடுவர் சொன்னபடியே போய்விடுவார்கள். இனி மூன்றாவது நடுவரின் முடிவுக்கு மட்டும்தான் போக முடியும் சாப்ட் சிக்னல் தர முடியாது.

இரண்டாவது விதி; வீரர்கள் பீல்டிங் நிற்கும்பொழுது எந்தெந்த பகுதிகள் எல்லாம் ஆபத்தானதோ, அந்தப் பகுதியில் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்துதான் நிற்க வேண்டும் என்கின்ற விதி கொண்டுவரப்பட இருக்கிறது. இது வீரர்களின் பாதுகாப்புக்கான மிக முக்கிய விதி.

மூன்றாவது விதி; ப்ரீ ஹீட் பந்துவீச்சில் ஒரு பேட்ஸ்மேன் போல்ட் ஆனாலும், அப்பொழுது ரன் ஓட வாய்ப்பு இருந்தால் ஓடி எடுத்துக் கொள்ளலாம். மேலும் பந்து பவுண்டரிக்கு போனால் பவுண்டரியே வழங்கப்படும். இந்த மூன்று விதிகள் ஜூன் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன!