2023 ஐபிஎல்-ல் சிறப்பாக விளையாடியும் வாய்ப்பு தராமல் கழட்டி விடப்பட்ட 3 முக்கிய வீரர்கள்!

0
1869
Santner

சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற முடிந்த 16 வது ஐபிஎல் சீசனில் ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று, மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தி இருக்கிறது!

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சில அணிகளில், சில திறமையான வீரர்களுக்குப் போதிய வாய்ப்பு கிடைக்கப்படவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அல்ஜாரி ஜோசப் நல்ல உதாரணம்.

- Advertisement -

அதே சமயத்தில் ஒரு போட்டிகளில் கூட டிவால்ட் பிரிவ்ஸ் மற்றும் சிவம் மாவி போன்ற இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த ஐபிஎல் தொடரிலும் நடப்பு ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக செயல்படும் கூட கழட்டி விடப்பட்ட மூன்று முக்கிய வீரர்கள் பற்றி இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.

மிட்சல் சான்ட்னர் சி.எஸ்.கே :

2018 ஆம் ஆண்டு 50 லட்சம் ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டு, கடந்த ஆண்டு மெகா ஏலத்திலும் தொடர்ந்து 1.90 கோடிக்கு மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்ட இந்த இடதுகை சுழற் பந்து வீச்சாளரின் திறமைக்கு எந்தப் பஞ்சமும் கிடையாது.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 6 சீசன்களில் அணியில் இருந்தவர், மொத்தம் நான்கு சீசனில் மட்டும்தான் விளையாட வாய்ப்பு பெற்றார். இதிலும் மொத்தமாக 15 போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு பெற்று இருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் மூன்று ஆட்டங்களில் வாய்ப்பு பெற்று மூன்று விக்கெட்டுகளை 6.75 என்ற சிறப்பான எக்கனாமியில் வீழ்த்தி இருந்த பொழுதும், தீக்ஷனாவை அணியில் கொண்டு வருவதற்காக இவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை.

ரைலி மெரிடித் எம்.ஐ ;

கடந்த ஆண்டு சீசனின் நடுவில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்தார். எட்டுப் போட்டிகளில் விளையாடி 8 விக்கட்டுகளையும் வீழ்த்தி இருந்தார். எக்கானாமி 8.43 என்ற அளவில் மிகச் சிறப்பாகவே இருந்தது.

இந்த வருடமும் இவர் தொடர் வாய்ப்புகள் பெறுவார் என்று இருந்த நிலையில், ஐந்து போட்டிகளில் மட்டும் வாய்ப்பு பெற்று, அதிலும் ஏழு விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்த பொழுதிலும் தொடர்ந்து இவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை.

இவருக்குப் பதிலாக ஐந்து ஆட்டங்களில் விளையாடிய இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோர்டான் ரன்களை வாரிக் கொடுத்து மும்பை அணிக்கு பெரிய தலைவலியை உண்டாக்கி, மூன்று விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

குயிண்டன் டி காக் எல்.எஸ்.ஜி :

கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக 15 போட்டிகளில் விளையாடிய இவர், 140 நாட் அவுட் என்ற பெரிய சதம் மற்றும் 3 அரை சதங்கள் உடன் 508 ரன்கள் குவித்து அசத்தினார்.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் தாமதமாகக் கலந்து கொள்ள வேண்டி இருந்ததால், இவரது இடத்தில் வாய்ப்பு பெற்ற வெஸ்ட் இண்டீஸ் துவக்க இடது கை ஆட்டக்காரர் கைய்ல் மேயர்ஸ் மிகச் சிறப்பாக விளையாட, இவருக்கு வாய்ப்பு கிடைப்பது மேலும் தாமதமானது.

இறுதியாக குஜராத் அணிக்கு எதிராக வாய்ப்பு பெற்ற இவர் 40 பந்துகளில் 71 ரன்கள் குவித்து அசத்தினார். ஆனாலும் மேற்கொண்டு மூன்று போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு தரப்பட்ட இவருக்கு, மிக முக்கியமான பிளே ஆப் சுற்றில் வாய்ப்பு தரப்படவில்லை. சென்னை விக்கெட்டில் ஏற்கனவே நன்றாக விளையாடி இருந்த கைய்ல் மேயர்ஸ்க்கு வாய்ப்பு தரப்பட்டு இவர் ஒதுக்கப்பட்டார்.