டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளராக விளங்கிய ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்கை டெல்லியின் கேப்பிட்டல்ஸ் நிர்வாகம் அவரை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக்கி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் வாய்ப்பை பாண்டிங் நிராகரித்ததை தொடர்ந்து அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கு முன்பாக இவரது சேவையை இந்த மூன்று அணிகளும் பயன்படுத்திக் கொண்டால் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக திகழ்ந்து இந்த முறை கொல்கத்தா அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய இந்தியாவின் கௌதம் கம்பீர் தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்று இருக்கிறார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஏற்கனவே சந்திரகாந்த் பண்டிட் தலைமை பயிற்சியாளராக விளங்கிவரும் நிலையில், ரிக்கி பாண்டிங்கை கம்பீர் இடத்திற்கு ஆலோசகராக கொண்டு வரலாம்.
கம்பீர் ஏற்கனவே 2008ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக பத்து ஆட்டங்கள் விளையாடி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கம்பீரின் இடத்திற்கு பாண்டிங்கை கொண்டு வந்தால் அது நிச்சயமாக கொல்கத்தா அணிக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
பஞ்சாப் கிங்ஸ்
ஐபிஎல் வரலாற்றில் ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத அணியாக திகழும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ட்ரெவோர் பேலிஸ் 2022ம் ஆண்டு முதல் பயிற்சியாளராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இருப்பினும் அவரது அனுபவம் பஞ்சாப் அணிக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. இதுவரை அவர் பயிற்சி அளித்த 42 போட்டிகளில் 18 போட்டியில் மட்டுமே வெற்றியும் 24 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. எனவே பயிற்சியாளர் மற்றும் கேப்டன் என இரண்டுமே பஞ்சாப் அணிக்கு கை கொடுக்காததால் பயிற்சியாளராக பாண்டிங்கை கொண்டு வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ்
கடந்த 2008ஆம் ஆண்டு முதன்முதலாக ஐபிஎல் கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அதற்குப் பிறகு ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தலைமை பயிற்சியாளர் தற்போது இல்லாத நிலையில் குமார் சங்கக்கார தலைமை பயிற்சியாளர் பதவி வகிக்க மாட்டார் என்று தெரிகிறது. நியூசிலாந்து முன்னாள் வீரர் ஷேன் பான்ட் மற்றும் ஜிம்பாப்வே முன்னாள் கிரிக்கெட் வீரர் டிரேவர் பென்னி ஆகியோர் உதவிப் பயிற்சியாளர்களாக இருக்கும் நிலையில் 2024ஆம் ஆண்டு ராஜஸ்தான் வலுவான நிலையில் இருந்தும் தோல்வி அடைந்து வெளியேறியதால் தலைமை பயிற்சியாளரின் தேவையை அறிந்திருக்கும்.
இதையும் படிங்க:2023 உலக கோப்பையில்.. இந்தியர்கள் எங்களை இப்படி நினைச்சாங்க.. அதான் ஜெயிக்க உதவியது – டிராவிஸ் ஹெட் பேட்டி
இதனால் பாண்டிங்கின் அனுபவம் ராஜஸ்தான் அணிக்கு பெரிதாக கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ராஜஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டிராவிட்டை பயிற்சியாளராக கொண்டுவர பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.