2023 உலக கோப்பையில்.. இந்தியர்கள் எங்களை இப்படி நினைச்சாங்க.. அதான் ஜெயிக்க உதவியது – டிராவிஸ் ஹெட் பேட்டி

0
772
Head

கடந்த ஆண்டு 2023 இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வென்று அசத்தியது. இந்த உலகக் கோப்பையை வெல்வதற்கு பின்னணியில் இருந்த ஒரு முக்கிய காரணம் குறித்து ஆஸ்திரேலியா அணியின் துவக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் ஏசி இருக்கிறார்.

இந்திய அணி அந்த குறிப்பிட்ட உலகக் கோப்பை தொடரில் அரை இறுதி வரையில் ஒரு தோல்வியும் அடையாமல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மேலும் இந்திய அணியின் பேட்டிங் யூனிட் மற்றும் பவுலிங் யூனிட் இரண்டும், இதுவரை அமைந்த உலகக் கோப்பை இந்திய அணிகளில் மிகச் சிறந்ததாக இருந்தது.

- Advertisement -

அதே சமயத்தில் ஆஸ்திரேலியா அணி இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா என இரண்டு அணிகளிடம் தொடர் தோல்விகளை சந்தித்து உலகக் கோப்பையை ஆரம்பித்தது. அந்த நேரத்தில் ஆஸ்திரேலியா அணி அரை இறுதிக்கு தகுதி பெறுவதே கடினம் என்று பேசப்பட்டது. மேலும் தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தட்டுத்தடுமாறி வென்றது.

இப்படியான நிலையில் தான் இறுதிப் போட்டியில் இந்தியா அணிக்கு எதிராக பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு 240 ரண்களில் இந்திய அணியை மடக்கியது. இதைத்தொடர்ந்து 47 ரண்களுக்கு மூன்று முக்கிய விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா அணி இழந்தது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் டிராவீஸ் ஹெட் தனியாக நின்று போராடி 137 ரன்கள் அடித்து நொறுக்கி ஆஸ்திரேலியா அணியை உலகக் கோப்பையை வெல்ல வைத்தார்.

2023 உலகக் கோப்பையை வென்றது குறித்து பேசி உள்ள டிராவிஸ் ஹெட் கூறும்பொழுது “அகமதாபாத்தில் இருந்த கூட்டம் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அந்தக் கூட்டம் மிகப்பெரியதாக இருந்தது. அந்த சூழ்நிலையில் அந்த இறுதிப் போட்டியை இன்னொரு போட்டி என்று நினைத்து, உங்களுடைய சிறந்த ஆட்டத்தை கொண்டு வருகிறீர்களா? என்பதுதான் முக்கியமானது. குறிப்பாக அந்த சூழலில் பலர் எங்களை பின்தங்கிய அணியாக நினைப்பார்கள். ஆனால் பின்தங்கியவர்களாக இருந்தது கூட ஒரு நல்ல உணர்வுதான்.

- Advertisement -

இதையும் படிங்க : அஸ்வின் செஞ்ச அத கோச் கூட செய்ய முடியாது.. ஐபிஎல் கேப்டனா கப் அடிக்கணும்.. நடக்கும் – பாபா இந்திரஜித் பேட்டி

இந்திய அணிக்கு நாங்கள் முடிந்த வரையில் அழுத்தம் கொடுக்க முயற்சி செய்தோம். அதே நேரத்தில் நாங்கள் நிதானமாக இருந்ததும் எங்களுக்கு உதவி செய்தது. ஒரு பெரிய கூட்டத்திற்கு முன்னால், ஒரு பெரிய பேட்டியில் விளையாடியது மகிழ்ச்சி அளித்தது.நாங்கள் பல ஆண்டுகளாக செய்தது போல, அந்தப் போட்டியிலும் அழுத்தத்தை மிகச் சிறப்பாக கையாண்டோம்” என்று கூறியிருக்கிறார்.