ஐபிஎல் 2024.. யாரும் எதிர்பாரா விதமா.. சிஎஸ்கே வாங்க வாய்ப்புள்ள 3 வீரர்கள்

0
8223

ஐபிஎல்லை பொறுத்த வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் மிகவும் வெற்றிகரமான அணி. ஆனால் சென்னை அணி ஒருசிலரைத் தவிர பெரிய நட்சத்திர வீரர்களை ஏலத்தில் வாங்க ஆர்வம் காட்டாது. இருப்பினும் தோனியின் கேப்டன்சி செயல்பாடுகள் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைகிறது.

கடந்த வருடம் ஐபில்லில் மற்ற அணிகள் பெரிதும் கண்டுகொள்ளாத வீரரான ரகானேவை ஏலத்தில் எடுத்தது. அவரும் சிறப்பாக விளையாடி சென்னை அணி கோப்பையை வெல்ல முக்கியப் பங்கு வகித்தார். அணிக்கு என்ன தேவையோ அதற்கான வீரர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து வெற்றி பெறுவதில் சென்னை அணி கில்லி.

- Advertisement -

ஏற்கனவே பென் ஸ்டோக்ஸ் சென்னை அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார்.
வரவிருக்கும் 2024 ஐபில்லில் மூன்று வியக்கத்தகு வீரர்களை சென்னை அணி குறி வைக்கவும் வாய்ப்புள்ளது. அந்த வீரர்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

உமேஸ் யாதவ்

கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட இம்பாக்ட் பிளேயர் என்னும் விதி உமேஷ் யாதவ் போன்ற பேஸ் ஸ்பெஷலிஸ்ட்களை அணியில் அந்த சூழ்நிலைக்குத் தகுந்தவாறு பயன்படுத்த உதவும். எனவே இவரைப் போன்ற வீரர்கள் முக்கியமான நேரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இல்லையெனில் அவருக்குப் பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்யவும் உரிமையாளரால் முடியும்.

- Advertisement -

எனவே சென்னை அணியில் தீபக் சகாருக்கு ஒரு பேக்-அப் தேவைப்படும் என்பதால் அனுபவம் கொண்ட உமேஷ் யாதவ் அவருக்கு பக்கபலமான பார்ட்னராக இருக்கலாம். எனவே இவரைத் தேர்வு செய்தால் சென்னை அணிக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். இவர் முதற்கட்ட ஓவர்களில் சிறப்பாகவும் செயல்படுவார்.

அமன் கான்

கடந்த வருடம் அவர் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு சிறப்பாக செயல்பட்ட போதிலும் டெல்லி அணி அவரை விடுவித்தது. பவர் ஹிட்டர் ஆன இவர் பந்துவீச்சிலும் சிக்கனமாக ரன்களை அளிக்கக் கூடியவர். எனவே இத்தகைய வீரர்களைத்தான் சிஎஸ்கே அணி மிகவும் விரும்பும். எனவே இவரை சென்னை அணி தேர்வு செய்யவும் வாய்ப்புள்ளது. அவ்வாறு தேர்வு செய்தால் இவர் எதிர்காலத்தில் சிவம் துபே போன்ற பவர் ஹிட்டராகவும் வர முடியும்.

கருண் நாயர்

அம்பத்தி ராயுடுவின் ஓய்வுக்குப் பிறகு அவர் இடத்தில் யாரை விளையாட வைக்கலாம் என்ற கேள்வி நிலவுகிறது. ஷாருக்கான் பற்றி அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் சமீபத்தில் அஸ்வின் கருண் நாயரின் பெயரைக் குறிப்பிட்டார். இது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். காரணம் கருண் நாயர் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்.

மேலும் சுழற் பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாகவும் செயல்படுவார். உண்மையில் மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்பட இவரால் முடியும். ஷாருக்கானால் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியுமா என்பது சந்தேகமே. எனவே இவரைத் தேர்வு செய்வது சென்னை அணிக்கு நல்ல தீர்வாக இருக்கும்.