ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20க்கு அறிவிக்கப்பட்ட பாகிஸ்தான் அணியில் திடீரென மூன்று மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆஸ்திரேலியா டி20 தொடரில் கிடைத்த அனுபவத்தால் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
தற்போது பாகிஸ்தான் அணி முகமது ரிஸ்வான் தலைமையில் ஜிம்பாப்வே சென்று தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. இது முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.
ஆஸ்திரேலிய தொடரில் கிடைத்த அனுபவம்
இந்த தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலியா சென்று இதேபோல் தலா மூன்று போட்டிகள் கொண்ட வெள்ளைப்பந்து தொடர்களில் பாகிஸ்தான் அணி விளையாடியது. அதில் முதலில் ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 எனக் கைப்பற்றி டி20 தொடரை 3-0 என இழந்தது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்ட இளம் தொடக்க ஆட்டக்காரர் சையும் அயூப்பை டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியில் சேர்க்கவில்லை. இது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது. தற்பொழுது இந்த விஷயங்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் தேர்வுக்குழு மாற்றி யோசித்து இருக்கிறது.
புதிதாக ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள்
தற்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடருக்கு பாகிஸ்தான் அணியில் புதிதாக தொடக்க ஆட்டக்காரர் சையும் அயூப், வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் அமீர் ஜமால், சுழல் பந்துவீச்சாளர் அப்ரார் அகமது ஆகியோர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
மேலும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வானுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக ஆகா சல்மான் புதிய கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க : ரோகித் கம்பீருக்கு இந்த கொள்கை இருக்கு.. ஜடேஜா அஸ்வின் இதனால கோபப்படல – அபிஷேக் நாயர் பேட்டி
பாகிஸ்தான் அணி : சைம் அயூப், அராஃபத் மின்ஹாஸ், ஹாரிஸ் ரவூப், ஹசீபுல்லா (வி. கீ), ஜஹந்தத் கான், முகமது அப்பாஸ் அப்ரிடி, முகமது ஹஸ்னைன், முஹம்மது இர்பான் கான், உமைர் பின் யூசுப், காசிம் அக்ரம், சாஹிப்சாதா ஃபர்ஹான், சல்மான் அலி ஆகா (கே), சுஃப்யாப் மொகிம், தயாப் தாக்ஹிர், உஸ்மான் கான், அமீர் ஜமால் மற்றும் அப்ரார் அகமது.