இந்திய அணி தற்போது மிக ஒற்றுமையாக இருப்பதாகவும், அதனால் சீனியர் வீரர்களான ஜடேஜா அஸ்வின் போன்றவர்களுக்கு வாய்ப்பு தரவில்லை என்றாலும் அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை எனவும் அபிஷேக் நாயர் கூறியிருக்கிறார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சீனியர் சாம்பியன் ஸ்பின்னர்ர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவருக்கும் வாய்ப்பு தரப்படவில்லை. ஆனால் ஜூனியரான வாஷிங்டன் சுந்தர் உடனடியாக விளையாட வைக்கப்பட்டார். இது குறித்தான கேள்விக்கு அபிஷேக் நாயர் பதிலளித்திருக்கிறார்.
ரோகித் – கம்பீர் கொள்கை
இதுகுறித்து அபிஷேக் நாயர் கூறும்பொழுது “புரிந்து கொள்ளாத சீனியர்கள் இருந்தால் மட்டுமே இந்த விஷயங்கள் எல்லாம் கடினமாக இருக்கும். ஆனால் அணி என்ன செய்ய நினைக்கிறது என்பதை புரிந்து கொள்ளும் அஸ்வின் மற்றும் ஜடேஜா போன்றவர்கள் இருப்பதால் எங்களுக்கு இது கடினமாக இல்லை. அணிதான் முதன்மையானது என்ற கொள்கை ரோகித், கம்பீர் வைத்திருக்கிறார்கள். அதை எல்லோரும் பின் தொடர்கிறார்கள்”
” எனவே அணியை முதன்மைப்படுத்தி எடுக்கும் முடிவுகளை அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள். மேலும் சீனியர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படாத முடிவை ஏற்றுக் கொண்டு, இங்கு ஜூனியர்களுக்கு உதவியாக இருக்கப் போகிறார்கள் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்”
பகல் இரவு டெஸ்ட் போட்டிக்கு தயாராவது
“நீங்கள் பகல் இரவு டெஸ்ட் போட்டிக்கு பிங்க் நிற பந்தில் விளையாட வரும் பொழுது உங்களுடைய எல்லா திட்டங்களிலுமே மாற்றங்கள் வர செய்யும். உங்களுடைய ரிலீஸ் பாயிண்ட் மற்றும் வேகம் எல்லாமே மாறும். இதற்கு நீங்கள் தயாராக வேண்டும்”
இதையும் படிங்க : 499 ரன்.. புரூக் 2 அதிரடி பார்ட்னர்ஷிப்.. தோல்வியின் விளிம்பில் நியூஸி.. இங்கிலாந்து பேட்டிங் பவுலிங் அசத்தல்
“இது சுழல் பந்துவீச்சாளர்களுக்கு சிவப்பு பந்தை காட்டிலும் மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். யாரும் பிங்க் நிற பந்தில் பந்து வீசவில்லை. எனவே இங்கு ஒரு உயர்தர சுழல் பந்துவீச்சாளருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நினைக்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்.